Breaking News

ஜனாதிபதியின் உரைக்கு நாமல் வழங்கிய பதில்



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க உட்பட குடும்பத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறும் போதும், தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியில் இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை நிட்டம்புவ, ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியை கடந்து செல்லும் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையியேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த பாதயாத்திரை ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியை கடந்து செல்லும் போது தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க பொலிஸ் மா அதிபரிடம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்த்தார். அதற்கமைய வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய தினம் சமாதியை மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதோடு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்பட்டிருந்தது.

என்றாலும் பாதயாத்திரையில் கலந்துகொண்ட மக்கள் பண்டாரநாயக்க சமாதியை தாண்டும் போது கோஷங்களை எழுப்பாமல், தலையில் கட்டப்பட்டிருந்த கவசங்களை கழட்டி அமைதியான முறையில் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தாம் உட்பட அனைவரும் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளையே கடைபிடிப்பதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு தாரைவார்த்துக் கொடுப்பதாயின் குதிகால் தேயும் வரையல்ல, உயிர் பிரியும் வரை போராடுவதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.