Breaking News

தமிழ்த் தலைமைகளும் றிஸ்க் எடுக்க வேண்டும்-நிலாந்தன்

தமிழ் அரசியல் தலைமைகள் சிங்களத்
தலைவர்களைப்போல தமிழ் மக்களின் உரிமைக்காக றிஸ்க் எடுக்குமாறு நிலாந்தன் கேட்டுக்கொண்டார்.

மன்னாரில் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் , கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,கல்விமான்கள் மற்றும் மதத்தலைவர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான நிலாந்தன் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்.


இந்த கருத்துக்களும் காரசாரமான உரையாடல்களும் இடம்பெற்ற வேளை எதிர்க்கட்சி தலைவர் கண்மூடி கேட்டுக்கொண்டிருந்ததாக அங்கிருந்த தமிழ்க்கிண்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் மைத்திரிபால சிங்கள மக்களுக்காக எவ்வாறு துணிச்சலாக சில முடிவுகளை எடுத்தாரோ அதே போல தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களின் உரிமைக்காக துணிச்சலுடன் செயலாற்ற வேண்டும் என்றும், தொடர்ந்தும் எமது பேரம்பேசும் வலு குறைவடைந்தே செல்கின்றது முக்கியமான உலக வரலாற்று ஆதாரங்களையும் இலங்கையின் நடைமுறை செயற்பாடுகளையும் மிகவும் வரிவாக விளக்கி அரைமணிநேர உரையினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்கள் பார்வைக்காக முழுமையாக இணைத்துள்ளோம்.





முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்