Breaking News

பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?



முன்னைய ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கு பணத்தைக் கொடுத்து, 200 வரையான விடுதலைப் புலிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

299 மே மாதம் முடிவுக்கு வந்த போரின், இறுதி வாரத்தில் 200 விடுதலைப் புலிகள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு பணத்தைக் கொடுத்து பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர்.

அவ்வாறு தப்பிச் சென்றவர்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களும் அடங்கியிருந்தனர். இவர்களில் பலர் இப்போது காணாமல் போனோரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமற்போனோர் பணியகம் இதுதொடர்பான விபரங்களை வெளியிடும்.

காணாமற்போனோர் செயலகம் சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் என்று கூட்டு எதிரணியினர் பரப்புரை செய்கின்றனர். இதன் மூலம், ஆட்கள் காணாமற்போன சம்பவங்களின் பின்னால் சிறிலங்கா இராணுவத்தினரே இருந்தனர் என்று அவர்கள் உலகத்துக்கு கூறுகின்றனர்.

ஆனால் ஆட்கள் காணாமற்போன சம்பவங்களுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்று எமக்குத் தெரியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.