Breaking News

மாணவர்களுக்கும்,நிர்வாகத்திற்கும் இடையில் இழுபறி நிலை..!!(2ம் இணைப்பு)

யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளமையினால் ஊழியர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர்.

இதனால் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக போராசிரியர் வசந்திஅரியரட்ணம், மற்றும் பீடாதிபதிகள் பல்கலைக்கழகத்திற்கு உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஊடகவியலாளர்களின் கமராவினை பறிக்க மாணவர்கள் முயற்சித்துடன் ஊடகவியலாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.






யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் இன்று முதல் முடக்கம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்திற்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் நிர்வாக ஊழியர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முடியாத வாறு வாயிற் கதவுகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமினாதன் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள் ஒன்றியம் மற்றும் பீடாதிபதிகளை இன்று காலை 10 மணிக்கு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபதி உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.