Breaking News

மீண்டும் வந்த ஆவா குழு,பிரபாகரன் படை - பின்னணியில் யார்?


மாண­வர்­களின் மர­ணத்­துக்கு தமிழ்ப் பொலி­ஸாரே
காரணம் என்­பதை வலி­யு­றுத்தும் வகை­யிலும், அவர்­களை இன­வி­ரோ­தி­க­ளா­கவும், சமூக விரோ­தி­க­மாண­வர்­களின் மர­ணத்­துக்கு தமிழ்ப் பொலி­ஸாரே காரணம் என்­பதை வலி­யு­றுத்தும் வகை­யிலும், அவர்­களை இன­வி­ரோ­தி­க­ளா­கவும், சமூக விரோ­தி­க­ளா­கவும் காண்­பிக்க முனைந்­தி­ருந்­தது அந்தத் துண்டுப் பிர­சுரம். ளா­கவும் காண்­பிக்க முனைந்­தி­ருந்­தது அந்தத் துண்டுப் பிர­சுரம்.


யாழ்ப்­பா­ணத்தில் மீண்டும் ஆவா குழு பற்­றிய பீதி கிளப்பி விடப்­பட்­டி­ருக்­கி­றது. கொக்­குவில் குளப்­பிட்டிச் சந்­தி­ய­ருகே, யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் பொலி­சாரால், கொல்­லப்­பட்டு இரண்டு நாட்கள் கழித்து சுன்­னா­கத்தில் தேசிய புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிசார் மீது வாள்­வெட்டு மேற்­கொள்­ளப்­பட்­டது.

அந்தச் சம்­ப­வத்­துக்கு உரிமை கோரிக் கொண்டே ஆவா குழு மீண்டும் வெளியே வந்­தி­ருக்­கி­றது.

அதுவும், இது­வரை காலமும், வெறும் வாள்­வெட்டு, கொள்­ளைகள் போன்ற சமூக விரோத செயல்­களின் அடை­யா­ள­மா­கவே பார்க்­கப்­பட்டு வந்த இந்தக் குழு, முதல் முறை­யாக உரிமை கோரும் துண்டுப் பிர­சு­ரங்­களை பர­வ­லாக விநி­யோ­கித்து, தமக்கும் ஒரு அர­சியல், சமூக நோக்கம் இருக்­கி­றது என்று காண்­பிக்க முனைந்­தி­ருக்­கி­றது.

யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் படு­ கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் பொலி­சாரின் அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல், அரா­ஜகம் என்­பதை அனை­வரும் ஏற்றுக் கொண்­டாலும், அதற்­காக பொலி­சாரைப் பழி­வாங்க வேண்டும் என்ற சிந்­தனை மாண­வர்கள் உள்­ளிட்ட தரப்­பி­ன­ரிடம் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை.

அதனால் தான், அமை­தி­யான முறையில் போராட்­டங்கள் நடத்­தப்­பட்டு, எதிர்ப்பும் கண்­ட­னமும் வெளி­யி­டப்­பட்­டது.

ஆனால், திடீ­ரென பொலிசார் மீது வாள்­வெட்டு ஒன்றை மேற்­கொண்டு விட்டு, அதனை மாண­வர்­களின் கொலைக்­கான பதி­லடி என்று ஆவா குழு துண்டுப் பிர­சு­ரங்­களை விநி­யோ­கித்து, கவ­னத்தை திசை திருப்ப முயன்­றது.

கடந்த 22 ஆம் திகதி, சுன்­னாகம் சந்­தியில் உள்ள வர்த்­தக நிலையம் ஒன்­றுக்கு முன்­பாக, இலக்­கத்­த­கடு இல்­லாத மோட்டார் சைக்­கிள்­களில் வந்த, முகத்தை மூடி மறைத்­தி­ருந்த ஆறு பேர் சிவில் உடையில் நின்ற தேசிய புல­னாய்வுப் பிரிவு பொலிசார் மீது வாள்­வெட்டு தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தனர்.

இதில்,சார்ஜன்ட் நவ­ரட்ன, கான்ஸ்­டபிள் ஹேரத் ஆகிய இரண்டு பொலி­சாரும் காய­ம­டைந்­தனர். எனினும் இந்தக் காயங்கள் பார­தூ­ர­மா­னவை அல்ல.

ஆறு பேர் கொண்ட அந்த வாள்­வெட்டுக் குழு, பதி­லடி நட­வ­டிக்­கை­யாக பழி­வாங்க வேண்டும் என்று செயற்­பட்­டி­ருந்தால், இரண்டு பொலி­சா­ரையும் மோச­மாக வெட்டிக் காயப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். அல்­லது அவர்­களை கொன்­றி­ருக்­கவும் முடியும். அவர்கள் அவ்­வாறு செய்­ய­வில்லை. சிறிய காயப்­ப­டுத்தல் நட­வ­டிக்கை ஒன்றைத் தான் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

அவர்­க­ளுக்கு அங்கு தேவைப்­பட்­டது, பொலிசார் வெட்­டப்­பட்டு இரத்த வெள்­ளத்தில் துடிப்­பதோ, உயிர்ப்­பலி எடுப்­பதோ அல்ல.

அதன் பின்னர் துண்­டுப்­பி­ர­சுரம் ஒன்றை வெளி­யிடும் இலக்கில் தான் இந்தச் சம்­பவம் நிகழ்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்குப் பின்னர் தான், யாழ். நகரை அண்­டிய பகு­தி­களில், இலக்­கத்­த­கடு இல்­லாத மோட்டார் சைக்­கிள்­களில் வந்த மர்­ம­ந­பர்கள், ‘அசுத்­தங்கள் அகற்­றப்­படும்’ என்ற தலைப்பில் ஆவா குழுவின் பெயரால் துண்டுப் பிர­சு­ரங்­களை வீசி­யி­ருந்­தனர்.

அதி­லேயே மாண­வர்­களின் கொலை­க­ளுக்கு பதி­ல­டி­யாக தாமே சுன்­னா­கத்தில் பொலிசார் மீது வாள்­வெட்டு மேற்­கொண்­ட­தாக உரிமை கோரப்­பட்­டி­ருந்­தது.

அந்த துண்டுப் பிர­சுரம் ஆவா குழு­வுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நோக்­கத்தை மாத்­தி­ர­மன்றி, வடக்கில் தமிழ்ப் பொலி­சாரின் செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்­கான உள்­நோக்­கத்­தையும் கொண்­டி­ருந்­தது.

மாண­வர்­களின் மர­ணத்­துக்கு தமிழ்ப் பொலி­சாரே காரணம் என்­பதை வலி­யு­றுத்தும் வகை­யிலும், அவர்­களை இன­வி­ரோ­தி­க­ளா­கவும், சமூக விரோ­தி­க­ளா­க வும் காண்­பிக்க முனைந்­தி­ருந்­தது அந்த துண்டுப் பிர­சுரம்.

அதற்கும் அப்பால், இவர்கள் தம்மால் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்ற எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அது­மாத்­தி­ர­மன்றி தமி­ழீழம், கலா­சார பூமி, சமூக சீர­ழிவு போன்ற வார்த்­தை­யா­டல்­களின் ஊடாக தமிழ் மக்­களின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்கு முயற்­சிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆவா குழுவை சமூக விரோதக் குழு­ வாக பொலி­சாரும் ஊட­கங்­களும் அடை­யா­ளப்­ப­டுத்தி விட்­ட­தா­கவும், ஆனால், பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்கு எதி­ரா­கவே பெரும்­பா­லான வாள்­வெட்­டுகள் தம்மால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அந்த துண்டுப் பிர­சு­ரத்தில் கூறப்­பட்­டி­ருந்­தது.

இது­வரை இதற்கு தாம் உரிமை கோர­வில்லை என்றும் இனிமேல் சமூக சீர­ழி­வு­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டி­க்­கைகள் தொடர்­பாக வெளிப்­ப­டுத்­துவோம் என்றும் ‘ஆவா காங்ஸ்ராஸ்’ என்று ஆங்­கி­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த துண்டுப் பிர­சு­ரத்தில் பல எழுத்துப் பிழைகள் காணப்­பட்­டமை, கடந்­த­கா­லத்தில் இது­போன்ற பல துண்டுப் பிர­சு­ரங்­களை வாசித்துப் பழ­கிய தமிழ் மக்­க­ளுக்கு இதன் பின்­ன­ணியில் யார் இருக்­கி­றார்கள் என்ற உண்­மையை நிச்­சயம் உணர்த்­தி­யி­ருக்கும். 

சுன்­னா­கத்தில், பொலிசார் மீது நிகழ்த்­தப்­பட்ட வாள்­வெட்டு, சம்­ப­வத்தை வைத்துக் கொண்டு வடக்கில் பொலி­சாரின் பாது­காப்புத் தொடர்­பாக கூட்டு எதி­ரணி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்த்­தன போன்­ற­வர்கள் நாடா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்பும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

ஆனால் அர­சாங்­கமோ, இது பொலிசார் என்று தெரி­யா­ம­லேயே நிகழ்த்­தப்­பட்ட வாள்­வெட்டு என்று சமா­ளிக்கப் பார்க்­கி­றது. கடையில் கப்பம் பெற வந்­த­வர்­களைத் தடுக்க முனைந்த போது தான் இந்தச் சம்­பவம் நடந்­த­தாக அர­சாங்கம் கூறு­கி­றது.

சிவில் உடையில் இருந்த புல­னாய்வுப் பிரி­வினர் அடை­யாளம் காணப்­பட்டே வெட்­டப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஆவா குழு வெளி­யிட்ட அறிக்கை அதனைத் தான் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

எனவே இந்தச் சம்­ப­வத்­துக்கு உள்­நோக்கம் இருந்­தி­ருக்­கி­றது என்­பது தெளி­வா­கி­றது. ஆவா குழு­வுக்கு புல­னாய்வுப் பொலி­சாரை அடை­யாளம் காணும் திறன் எவ்­வாறு கிடைத்­தது? என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், யாழ்ப்­பா­ணத்தில் பல்­வேறு வாள்­வெட்டுக் குழுக்கள் தோன்­றின. அவற்றில் ஒன்று தான் ஆவா குழு. இந்தக் குழுவின் நட­வ­டிக்­கைகள் எல்லை மீறிய போது, நீதி­மன்ற உத்­த­ர­வுகள் மற்றும் பொலி­சாரின் நட­வ­டிக்­கைகள் மூலம், இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆவா குழுவில் செயற்­பட்­ட­வர்கள் பலர் கைது செய்­யப்­பட்­டனர் அவர்­க­ளிடம் இருந்து வாள்கள், கத்­தி­களை, குண்­டுகள், மோட்டார் சைக்­கிள்கள் கைப்­பற்­றப்­பட்­டன.

சில கால­மாக சற்றுக் குறைந்­தி­ருந்த வாள்­வெட்­டுகள் அண்­மையில் அதி­க­ரிக்கத் தொடங்­கிய போது, மீண்டும் நீதித்­து­றை­யி­னரும், பொலி­சாரும் உசா­ர­டைந்­தனர். இதனால், இந்தக் குழுக்­களை கண்­டு­பி­டித்து ஒடுக்­கு­வ­தற்­காக புதிய பொலிஸ் பிரிவு ஒன்று உரு­வாக்­கப்­பட்ட மறு­நாளே கொக்­குவில் சம்­பவம் இடம்­பெற்­றது.

வாள்­வெட்டுக் குழுக்­களை அடக்­கு­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு முயற்சி மாண­வர்கள் கொல்­லப்­பட்­டதன் விளை­வாக முடங்கிப் போனது. 

இந்த பின்­ன­ணியில் தான், சுன்­னா­கத்தில் ஆவா குழு என்ற பெயரில் வாள்­வெட்டு அரங்­கேற்­றப்­பட்­டது.

பதி­லடி, சமூகச் சீர­ழி­வு­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்ற புதிய அவ­தா­ரத்­துடன் ஆவா குழு யாழ்ப்­பாண சமூ­கத்­துக்குள் செல்­வாக்கைப் பெற்­று­விட முயற்­சிக்­கி­றது.

விடு­தலைப் புலி­க­ளுக்குப் பிந்­திய கால­கட்­டத்தில் வடக்கில் சமூகச் சீர­ழி­வுகள், குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்து விட்­டன என்­பது எல்­லோ­ராலும் சுமத்­தப்­ப­டு­கின்ற ஒரு குற்­றச்­சாட்டு.

இதனை யார் தான் தடுக்கப் போகி­றார்கள் என்ற ஆதங்கம், முத­ல­மைச்சர், நீதி­ப­திகள், மத்­திய அர­சி­லுள்ள அமைச்­சர்­க­ளிடம் இருந்து கூட வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

சமூகச் சீர­ழி­வு­களை தடுக்க யாருமே இல்­லையா என்று தமிழ் மக்கள் புலம்­பு­கின்ற சூழலில், இத்­த­கைய சீர­ழி­வு­களை அனு­ம­திக்­காத புலி­க­ளுக்குப் பின்னர் ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்தை, ஆவா குழு நிரப்ப முனை­கி­றது என்­பதை அதன் துண்டுப் பிர­சுரம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அது மாத்­தி­ர­மன்றி, வடக்கில் தமிழ்ப் பொலி­சாரை அதிகம் நிய­மிக்க வேண்டும் என்று அர­சியல் மட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்ற நிலையில், தமிழ்ப் பொலி­சாரை இன விரோ­தி­க­ளா­கவும், சமூக விரோ­தி­க­ளா­கவும் அடை­யா­ளப்­ப­டுத்த முனைந்­தி­ருக்­கி­றது துண்டுப் பிர­சுரம்.

இதன் மூலம், தமிழ்ப் பொலிசார் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி, அவர்­களை வடக்­கிற்கு வெளியே பணி­யாற்ற நிர்ப்­பந்­திக்க முயற்­சிக்­கப்­ப­டு­வ­துடன், தமிழ் பொலி­சா­ருக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடையில் ஒரு பிளவை ஏற்­ப­டுத்­தவும் முயற்­சிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

வடக்கில் வாள்­வெட்டுக் குழுக்கள் தொடர்ந்து நட­மா­டு­வதை விரும்பும் தரப்பு ஒன்றே நன்கு திட்­ட­மிட்டுச் செயற்­பட்­டி­ருக்­கி­றது, செயற்­ப­டு­கி­றது என்­பதை இதன் மூலம் உறு­திப்­ப­டுத்த முடி­கி­றது.

அதே­வேளை, ஆவா குழு என்று கூறப்­படும் குழு உண்­மையில் யாரு­டைய தலை­மையில் இயங்­கு­கி­றது என்­பது யாருக்கும் தெரி­யாது.

ஆவா என்­பது சிங்­களச் சொல். ஒரு சிங்­களச் சொல்லின் பெயரால், இயங்கும் குழு­வொன்று யாழ்ப்­பா­ணத்தின் கலா­சாரப் பெரு­மையைக் காப்­ப­தா­கவும், சமூக சீர­ழி­வு­களை தடுப்­ப­தா­கவும், கூறிக் கொள்­வது முரண்­பா­டான விட­யங்­க­ளாக இருக்­கின்­றன.

இந்த ஆவா குழுவை முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் யாழ்ப்­பா­ணத்தில் பணி­யாற்­றிய இரா­ணுவ உயர்­அ­தி­காரி ஒரு­வரே உரு­வாக்­கினார் என்று கொழும்பு இணை­யத்­தளம் ஒன்று தகவல் வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், நன்கு திட்­ட­மிட்டு இந்தக் குழு உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது, பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் கொலை தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் மூலம் பொலிசார் கண்­ட­றிந்­துள்­ள­தா­கவும் எனினும் இது­பற்­றிய இர­க­சி­யங்­களை வெளி­யிடக் கூடாது என்று அர­சியல் தலை­மை­களால் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்தச் செய்­தியில் கூறப்­பட்­டி­ருந்­தது.

இந்தச் சந்­தே­கத்தை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­கவும் கடந்த புதன்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நடந்து கொண்டார்.

இந்தக் குழுக்களின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு இருப்பதாக வடக்கு மக்கள் கூறுகிறார்களே என்று அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் எந்தப் பதிலையும் கூறாமல் எழும்பிச் சென்றிருந்தார்.

அவ்வாறாயின் அவருக்கு ஏதோ உண்மை தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் மழுப்ப முயன்றிருக்கிறார். இல்லையேல் உறுதியாக மறுத்திருக்கலாம்.

ஆவா குழுவைப் பயன்படுத்தி மீண்டும் வடக்கில் குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

வடக்கில் எந்தளவு காலம் பதற்றமான நிலை நீடிக்கிறதோ, அந்தளவு காலத்துக்கு வடக்கில் படையினரின் இருப்பும் கேள்விக்கிடமற்றதாகவே இருக்கும்.

இந்த இரண்டு விடயங்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் எவராலும், ஆவா குழு போன்றவற்றின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதையும் அவர்களின் தந்திரம் என்ன என்பதையும் இலகுவாகவே உணர்ந்து கொள்ள முடியும்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்