ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - THAMILKINGDOM ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - THAMILKINGDOM
 • Latest News

  ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடாகவே சிறிலங்கா அதிபரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் கொல்லப்பட்டமை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தக் கோருவதற்கும், கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு வழங்கக் கோருவதற்குமே சிறிலங்கா அதிபரைச் சந்திக்க மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது.

  அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் ஏழு பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கடந்த வாரம் தொடக்கம் விரிவுரைகளைப் புறக்கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top