நாட்டின் பாரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் - THAMILKINGDOM நாட்டின் பாரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் - THAMILKINGDOM
 • Latest News

  நாட்டின் பாரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில்

  நாட்டில் பாரிய மீன்பிடித் துறைமுகமாக பருத்தித்துறைக்கு அருகாமையில் நிர்மாணிக்க ப்படவிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. 


  வடக்கு மீனவர்களுக்காக இலவசமாக 150 வள்ளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

  50 வீத நிவாரணக் கடன் அடிப்படையில் கடற்றொழில் உபகரணங்களை வழங்குவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். 

  கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழில் சமூகத்தினருக்கும் தேவையான வசதிகள் வழங்கப்படவுள்ளன. 

  கடற்றொழில் சமூகத்தினருக்கு இவ்வாறான நிவாரணம் 20 வருடங்களுக்குப் பின்னரே வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நாட்டின் பாரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top