Breaking News

2017 ஜெனிவா கூட்டத்தொடர் மாவீரர் நினைவேந்தலிற்கு அரசு அனுமதி



2017 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை நோக்கமாக கொண்டே ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் நினைவேந்தல் தினத்தை நினைவு கூற அனுமதி வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்விலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பும் வகையிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் மாவீர்ர் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கியிருக்கலாம் எனவும் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

யுத்ததில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியும் மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு அஞ்சலி செலுத்த முடியாது என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்தது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த 26 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் தமிழர் தாயகப் பிரதேசங்களிலுள்ள மாவீர்ர் துயிலும் இல்லங்கள் சிரமானம் செய்யப்பட்டு 27 ஆம் திகதி மாலை 6.5 ற்கு 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை போன்று, மக்களினால் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமசந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.