தமது ஆட்சி காலத்தில் செய்தவற்றை கூறுகிறார் கோட்டா - THAMILKINGDOM தமது ஆட்சி காலத்தில் செய்தவற்றை கூறுகிறார் கோட்டா - THAMILKINGDOM

  • Latest News

    தமது ஆட்சி காலத்தில் செய்தவற்றை கூறுகிறார் கோட்டா



    அரச அதிகாரிகள் தீர்மானம் எடுக்க அஞ்சுகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறை, பாலதுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய போது கோத்தபாய ராஜபக்ச இதனைத் தெதரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், ராஜபக்சக்கள் உள்ளிட்ட ஏனைய அனைவர் பின்னாலும் துரத்தி விசாரணை நடத்தப்படுகின்றது. போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி விசாரணை நடத்தப்படுகின்றது.

    நிதி மோசடி விசாரணைப் பிரிவு அல்லது ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்படுகின்றது. தற்போது பாருங்கள் யாருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    இந்த ஒன்பது ஆண்டுகளில் பாரியளவிலான ஊழல் மோசடிகளை நாம் நான்கு பேரே செய்திருக்கின்றோம்?அன்று, அதிகாரிகள் என்ற ரீதியில் எமக்கு சுதந்திரம் காணப்பட்டது தீர்மானங்களை எடுப்பதற்கு, அன்று நாம் எடுத்த தீர்மானங்கள் காரணமாக நாம் இன்று நிதி மோசடி விசாரணைப்பிரிவிற்கு செல்ல நேரிட்டுள்ளது.

    அரச ஊழியர்கள் அதிகாரிகள் மீது இவ்வாறு தேவையற்ற அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்பட்டால் எதிர்காலத்தில் அதிகாரிகள் எவ்வித தீர்மானங்களையும் எடுக்க மாட்டார்கள். இதன் காரணமாகவே இன்று நாட்டில் எவ்வித அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதில்லை.

    ஒரு அமைச்சர் கூறுகின்றார் 35 பேர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர் என, அமைச்சரவை பேச்சாளர் அதனை மறுக்கின்றார். மக்கள் இதில் யாரை நம்புவார்கள்?

    எதிர்க்கட்சி உறுப்பினர்களை நீதிமன்றம் அழைத்துச் சென்ற விசாரணை செய்வதற்காக மட்டுமே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்துகின்றார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தமது ஆட்சி காலத்தில் செய்தவற்றை கூறுகிறார் கோட்டா Rating: 5 Reviewed By: Tamilkingdom
    Scroll to Top