செம்மணி மண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - THAMILKINGDOM செம்மணி மண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - THAMILKINGDOM
 • Latest News

  செம்மணி மண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

  முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) செம்மணி மண்ணில் ஈகைச் சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


  மேற்படி நினைவேந்தல் நிகழ்வில், வட. மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, வட. மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஈகைச்சுடரேற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

  இதன்போது, ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணைகள் மூலம் நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதையும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

  முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இன்று முதல் 18ஆம் திகதிவரை தமிழர் படுகொலை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: செம்மணி மண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top