உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி! - THAMILKINGDOM உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி! - THAMILKINGDOM
 • Latest News

  உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி!

  யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோகர் ஜீ.எம்.சரத் ஹேமச்சந்திர வின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவி னால் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

  சரத் ஹேமச்சந்திரவின் மனைவி, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்ன தாக பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்தார். தற்போது அவரது கணவன் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு பதவி உயர்வுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சரத் ஹேமச்சந்திரவுக்கு கௌரவம் அளிக்கும் நோக்கில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

  யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக, சரத் ஹேமச்சந்திர கடந்த 15 வருட காலமாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top