இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் காயம்? - THAMILKINGDOM இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் காயம்? - THAMILKINGDOM
 • Latest News

  இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் காயம்?

  யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

  குறித்த துப்பாக்கி சூட்டுப் பிரயோகம் நல்லூர் தெற்கு வீதியில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
  நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

  இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  நீதிபதி இளஞ்செழியன் தனது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் காயம்? Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top