சிறிதரனின் சவாலை ஏற்றார் ஜேர்மன் தொழில்நுட்ப வல்லுனர் - THAMILKINGDOM சிறிதரனின் சவாலை ஏற்றார் ஜேர்மன் தொழில்நுட்ப வல்லுனர் - THAMILKINGDOM
 • Latest News

  சிறிதரனின் சவாலை ஏற்றார் ஜேர்மன் தொழில்நுட்ப வல்லுனர்

  யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தொலைபேசி உரையாடல் ஒன்று தொடர்பில் எழுந்த சர்ச்சை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நேற்று பகிரங்க சவால் ஒன்றை விடுத்திருந்தார்.

  இந்த உரையாடல் தன்னுடையதல்ல எனவும் அதில் இடைச்செருகல்கள் வந்திருப்பதாகவும் முடிந்தால் தான்தான் அதில் பேசுவதை தற்போதைய தொழில்நுட்பம் மூலமாக உறுதிப்படுத்தினால் தான் இப்போதே பதவி விலகுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

  இந்த நிலையில் ஜேர்மனியின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான RTL தொலைக்காட்சி நிறுவனத்தில்  பணியாற்றிவரும் Voice Analysis துறையில் பாண்டித்தியம் பெற்ற பொறியியலாளர் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

  இந்த பொறியியலாளர் RTL தொலைக்காட்சி நிலையத்தில்   Picassoplatz 1 50679 Köln, Germany  என்னும் முகவரியில் வேலை செய்கின்றார். உங்களுடைய சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். முதலில் நான் இதனை நிரூபித்தால் 24 மணிநேரத்துள் பதவி விலகுவேன் என கையொப்பமிட்டு சபாநாயகரினூடாக உறுதிப்படுத்திய கடிதத்தை தருமாறும் அவர் கோரியுள்ளார்.(இல்லையேல் அதுவும் நான் சொல்லவில்லை என இன்னொரு காணொளியூடாக நீங்கள் சொல்வீர்கள் என்பதால் இந்த கோரிக்கையை வைப்பதாக தெரிவித்துள்ளார். 

  உங்கள் கடிதம் கிடைத்த மறுகணம் உத்தியோகபூர்வமாகவும் சட்டரீதியாகவும் உறுதிப்படுத்தி Voice Analysis(Incl. EGG, Strobe, Vocal trac, etc...) நாங்கள் வெளியிடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிறிதரனின் சவாலை ஏற்றார் ஜேர்மன் தொழில்நுட்ப வல்லுனர் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top