Breaking News

டெனீஸ்வரனின் பதவி பறிபோகிறது-அமைச்சராகிறார் விந்தன்

வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அமைச்சு பதவி பறிபோகவுள்ளதாக செய்திகள் வெளிஜயாகியுள்ளது.

டெனீஸ்வரன் தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகத்திற்கு வடமாகாண முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கு, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகத்தினால் கடந்த வௌ்ளிக்கிழமை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தில், “எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் பா.டெனீஸ்வரன் இழந்துள்ளார்.

பா.டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்குப் பதிலாக எமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடக்கு மாகாண சபை உறுப்பினரை அமைச்சராக நியமிக்குமாறு தங்களைக் கோருவதற்கும் கட்சி தீர்மானித்துள்ளது. டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். தங்கள் அமைச்சரவைக்கான எமது கட்சியின் பிரதிநிதியின் பெயரை உரிய நேரத்தில் அறியத்தருவோம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், “தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அனுப்பி வைத்துள்ள கடிதம் கிடைக்கபெற்றது. அந்த கடிதத்தின் உள்ளடக்கங்கள் கவனத்தில் எடுக்கப்படும். ஏற்கனவே அமைச்சர் பா.டெனீஸ்வரன் எமது விசாரணைக்குழு முன் தான் தோன்றமாட்டேன் என்று பகிரங்கமாகக் கூறியதை முன்வைத்தும் வேறு காரணங்களுக்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருந்தேன்.

எனவே உங்கள் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்த அமைச்சராக டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டால் அவருடைய இடத்திற்கு முதலமைச்சரின் விசுவாசத்துக்கு உரியவராக விளங்குகின்ற அதே கட்சியான ரெலோவினை சேர்ந்த விந்தன் கனகரத்தினம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு கிடைத்துள்ளது.

இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்டுகின்ற நிலையில் அந்த நியமனமும் கேள்விக்குரியதாகவே இருப்பதாகத் தெரிகிறது.

இதனிடையே விந்தன் கனகரத்தினம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் விசுவாசத்துக்குரிய உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.















தொடர்புடைய முன்னைய செய்திகள்





ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)


விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்