சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரங்கள்! - THAMILKINGDOM சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரங்கள்! - THAMILKINGDOM
 • Latest News

  சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரங்கள்!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளமன்ற
  உறுப்பினர் சிறிதரனுக்கெதிராக கிளிநொச்சி நகர்ப்பகுதியை அண்டி மக்கள் அதிகமாகக் கூடும்இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  கரைச்சிப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையிலேயே இத்துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  போலித் தேசியம் பேசாதே, புலிகளை வைத்து பிழைப்பு நடத்தாதே!, மலையக மக்கள் உனக்கென்ன கறிவேப்பிலையா?, சமூக வேறுபாடு காட்டுபவர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு தகுதியானவரா? வாக்கு வேட்டைக்குத்தானா வடக்கத்தையான், போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

  அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மலையக மக்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகத்தால் திட்டிய ஒலிப்பதிவொன்று இணையத்தளங்களில் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை அவர் மறுத்து வருகின்றார்.

  இந்நிலையிலேயே இத்துண்டுப் பிரசுரங்கள் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரங்கள்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top