Breaking News

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடாது – சம்பந்தன்!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியி டாதென தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறி ப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடக வியலாளர்களை வரவழைத்து சம கால அரசியல் தொடர்பாக பரிந்துரை த்துள்ளார். 

இப் பரிந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாதென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பி லேயே போட்டியிடுமெனவுக் குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் தனித்துப் போட்டியிடப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழரசுக் கட்சி ஒற்றுமையைத் தொடர  விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.  

20ஆவது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணா னதென உச்ச நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளதால் அச் சட்டமூலம் அரசாங்க த்தினால் கைநழுவப்படலாமென்பதனைத் தொடர்ந்து சிந்திக்கத் தேவையி ல்லையெனக் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கே ற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.