Breaking News

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய எதிர்ப்புச் சட்டம்–சாலக ரத்நாயக்க

இலங்கையில் பயங்கரவாதத் தடை ச்சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைக்கப்பட்டுள்ள தாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் எழுப்பப்பட்ட கேள் விக்கு பதில் தொடுத்தபோது மேற்கு றிப்பிட்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில் கடந்த ஆறு மாதங்களாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. 2013ஆம் ஆண்டிலிருந்து, 695 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதா கியுள்ளனர். 

தீவிரவாத செயற்பாடுகளின் சந்தேகத்தின் பொருட்டே இவர்கள் கைதாகி யுள்ளனர். 

நீதிமன்ற விசாரணைகளின் பின் இவர்களில் பலர் விடுதலை ஆகியுள்ளனர்.

சிலர் மீதான குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டதையடுத்து வழக்குகள் தொடர ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.