Breaking News

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் - யூ.எஸ்.எயிட்

அனர்த்தங்களால் பாதிக்கப்படைந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழ ங்குவதிலும், அவர்களது வாழ்வாதா ரத்தை கட்டியெழுப்புவதிலும், கவ னம் எடுத்துள்ளதாக யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் ஸ்ரீலங்கா மற்றும் மாலை தீவுகளுக்கான பணிக்குழுத் தலைவர் கலாநிதி அன்ரூவ் சிஸன் குறிப்பிட்டுள்ளார். 

யூ.எஸ்.எயிட் நிறுவனத்தால் வழங்கப்படும் உதவிகளை பார்வையிடுவத ற்காக கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த அன்ரூவ் சிஸன் சித்தாண்டி ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் சுத்தமான குடிநீர் விநியோகத்தை தொட ங்கியுள்ளார். 

மட்டக்களப்பின் நீர்த் தேவையுள்ள 5 பிரதேசங்களில் பாடசாலைகள் மற்றும் உள்ளுர் சமூகங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான தமது பணியில் இதுவரை 45 பாடசாலைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களும், 5 ஆயிரம் குடிமனைகளுக்கு நீர் இணைப்புக்களை வழங்குவதன் மூலம் 20 ஆயிரம் பேரும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ள வழியேற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
குறித்த நிறுவனத்தின் மூலமாக 2012ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 2700 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், 40 கிணறுகள் அமைக்கப்பட்டும் மேலும் 1600 கிணறுகள் புனர மைக்கப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. வறட்சியிலிருந்து மீட்சி பெற உங்க ளுக்கு இத் திட்டம் பெருந்துணையாக அமையுமென  நம்புவதாக கலாநிதி அன்ரூவ் சிஸன் தெரிவித்துள்ளார்.