விலங்கு உள்ளத்தையும் உலுக்கிய வித்தியாவின் பகீர்வுகள் ! - THAMILKINGDOM விலங்கு உள்ளத்தையும் உலுக்கிய வித்தியாவின் பகீர்வுகள் ! - THAMILKINGDOM
 • Latest News

  விலங்கு உள்ளத்தையும் உலுக்கிய வித்தியாவின் பகீர்வுகள் !

  யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா வின் பிரிவு நூற்றுக்கணக்கான மக்க ளை உலுக்கியுள்ளது. பல தமிழ் மக்க ளை மட்டுமன்றி இனம் மதம் மொழி என அனைத்தையும் கடந்து மானு டத்தை நேசிக்கும் அத்தனை மக்க ளையும் அவளது பிரிவு உலுக்கியு ள்ளது.

  மேலும் மனிதர்களை மட்டுமன்றி ஐந்தறிவு படைத்த சீவன் ஒன்றைக்கூட அந்த இளங்குருத்து வாடிப்போன சம்பவம் வேதனையில் துவண்டுள்ளது. 

  மாணவி வித்தியா செல்லமாக வளர்த்த நாய் அவளைக் காணாது ஏங்கித் தவித்தது . சிறு குட்டியாக இருக்கும்போதே அதனை வளர்த்தபடியால் அதற்கு ‘குட்டி’ என்ற பெயரைச் சூட்டினாள். 


  செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த நாய், வித்தியா தினமும் பாடசாலை செல்லு ம்போது வீதிவரை அவளது தாயோடு வந்து வாலாட்டி வழியனுப்பிவைக்கும். பின்னர் பாடசாலை முடித்து வீடு வரும்போது கூட வாலைக்குழைத்தபடி வித்தியாவை வட்டமிடும். 

  வித்தியா இந்த மண்ணை விட்டு மறைந்து புண்ணிய சொர்க்கத்தில் குடி புகுந்தபோது இந்த ஐந்தறிவு சீவனும் கோடானகோடி மக்களில் ஓருயிராக கதிகலங்கியுள்ளது.

  சாவு நிகழ்ந்த அந்த நாட்களில் மிகுந்த சோகத்துடன் இந்த நாய் காண ப்பட்டுள்ளது. வித்தியாவின் உடலம் புதைக்கப்பட்ட இடத்தையே சில நாட்களாக குறித்த நாய் சுற்றிச் சுற்றி வந்து வானத்தைப் பார்த்து அவல ஒலி எழுப்பியுள்ளது. 

  வித்தியாவின் நாற்பத்தைந்தாம் நாளின்போது ‘குட்டி’யின் முன்னால் வித்தியாவின் உருவப் படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்போது அந்தப் பட த்தையே ‘குட்டி’ கண்ணுற்றவாறு  நின்றுள்ளது. 

  இக் காட்சி மனிதர்களின் கண்களை மீண்டும் கலங்க வைத்துள்ளது. ஊதை யிற் பட்ட பூளைப் பூவைப்போல் கயவர்களால் நூறி எறியப்பட்ட எங்கள் வித்தி யாவின் ஆத்துமா மனிதத்தை மட்டுமன்றி ஐந்தறிவு விலங்கினத்தையும் உலுக்கிய கண்கூடாக காணமுடிகின்றது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: விலங்கு உள்ளத்தையும் உலுக்கிய வித்தியாவின் பகீர்வுகள் ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top