இளைஞர்களே உங்களுக்காக உயிரை விடவும் தயார் - கருணா அழைப்பு ! - THAMILKINGDOM இளைஞர்களே உங்களுக்காக உயிரை விடவும் தயார் - கருணா அழைப்பு ! - THAMILKINGDOM

 • Latest News

  இளைஞர்களே உங்களுக்காக உயிரை விடவும் தயார் - கருணா அழைப்பு !

  எங்களுக்கு பதவி வேண்டாம், பட்டம் வேண்டாம், தமிழ் மக்களுக்காக உயிரை யும் கொடுக்கத் தயாராக உள்ளேன்; 

  உங்களுக்காக உதயமாகியுள்ள எமது கட்சியுடன் ஒன்றிணையுங்கள் என விநாயகமூர்த்தி முரளீதரன் என அழைக்கப்படும் கருணா அழைப்பா ணை  விடுத்துள்ளார். 

  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரான அவர் வெளி யிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்திருப்பதாவது, “தற்போது தமி ழர்களுக்கு தேவை பாதுகாப்பு அரசியலே தேசிய அரசியலைப் பேசி பேசி தமிழினம் அழியும் நிலையில் உள்ளது.

  கிழக்கின் நிலமை மேன் மேலும் மோசமடைந்து செல்கின்றது பெரும்பான்மை இனத்துடன் நாம் சேர்ந்து செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் எம் நிலமை மோசமடையும் என்பதை அனைத்து தமிழ் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

  தேசியம் கதைக்கும் எந்த தமிழனும் இன்று மட்டக்களப்பானை காப்பாற்ற முன்வரவில்லை. அதேபோன்றுதான் வருகின்ற பிரதேச சபைதேர்தலை காரணம் காட்டி இப்பவே பல்வேறு கூத்தாடிகள் படையெடுக்க ஆரம்பித்து ள்ளார்கள். 

  இவர்களின் ஆயுதம் தேசியம். 

  இவர்களை நம்பி எம் உறவுகளே ஏமாற வேண்டாம். இவர்கள் தங்கள் பைகளை நிரப்புவதற்கும் வெறும் அதிகார மோகத்திலும்தான் இன்று உங்கள் முன் வருகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

  பிரதேச சபைதான் எங்கள் கிராமங்களை காப்பாற்றக்கூடிய அலகு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதை கூறுபோட நீங்கள் அனுமதித்தால் இழப்பை சந்திக்க போவது நீங்கள்தான். 

  இன்று ஒரு பஸ்தரிப்பு இடத்தை கட்ட முடியாமல் நாம் தவிக்கின்றோம். பிரதேச சபை அதிகாரம் எங்களிடம் இருந்திருக்குமாக இருந்திருந்தால் அதை நாம் கட்டியிருக்கலாம். 

  இதனால்தான் நான் அன்பாக எங்கள் இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கி ன்றேன். பலர் இன்று சுயேட்சையா போட்டியிடுவதிற்கும் திட்டமிடுகின்றா ர்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி யுடன் அணிதிரளுங்கள் தேர்தலுக்கான சிறந்த வியுகத்தை நாம் வைத்து ள்ளோம். 

  இது உங்களுக்கான கட்சி தமிழர்களை பாதுகாக்க உதயமான கட்சி இதில் எல்லோருக்கும் உரிமை இருக்கின்றது என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். 

  எங்களுக்கு பதவி வேண்டாம் பட்டம் வேண்டாம் உங்களுக்காக உயிரை தரு வதற்கு நாம் தயாரகவுள்ளோம் அனைவரும் அணி திரளுங்கள்” என கருணா அழைப்பாணை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இளைஞர்களே உங்களுக்காக உயிரை விடவும் தயார் - கருணா அழைப்பு ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top