யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கைது! - THAMILKINGDOM யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கைது! - THAMILKINGDOM
 • Latest News

  யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

  தமிழ்தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் தர்சாநந்தனின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  யாழ்ப்பாணம் கந்தர்மடம் இந்து மக ளீர் கல்லூரிக்கு அருகில் இன்று (30) அதிகாலை தேர்தல் பிரசார சுவரொ ட்டிகளை ஒட்டிய போது ரோந்து நடவ டிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் எனவும் ஒருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக வும் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதி வான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க ப்படுமென  யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

  தோ்தல் பிரசாரம் தொடா்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நபரின் வீட்டில் குழுவாக சிறிய கூட்டம் ஒன்று வைப்பதாயின் அந்த வீட்டு உரிமையாளர் சம்மதத் கடிதம் தரவேண்டும், ஒரு பிரதேசத்திற்கு ரிய காரியாலயமாக ஒரு கட்சிக்கு ஒரு காரியாலயம் மாத்திரமே அப்பிரதே சத்தில் அமைக்க முடியும், அதற்குரிய அனுமதியையும் தேர்தல் செயலக த்தில் பெற வேண்டும். 

  வீதிகளைக் குறுக்கீடு செய்து கொடிகள் மற்றும் பனா்கள் கட்டக்கூடாது சட்ட விரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோருக்கு கட்சி பேதங்கள் பாராமல் முறையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கைது! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top