தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வரதராஜப்பெருமாள் உட்பட 6 பேரிடம் பொலிஸார் விசாரணை - THAMILKINGDOM தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வரதராஜப்பெருமாள் உட்பட 6 பேரிடம் பொலிஸார் விசாரணை - THAMILKINGDOM
 • Latest News

  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வரதராஜப்பெருமாள் உட்பட 6 பேரிடம் பொலிஸார் விசாரணை

  மட்டக்களப்பு நகரில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதான வேட்பாளர் வரதராஜப்பெருமாள் உட்பட 6 வேட்பாளர்களை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  மட்டக்களப்பு மாநகர சபையில் வரதராஜப்பெருமாள் தலைமையில் தமிழர் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், மட்ட க்களப்பு நகரில் இன்று காலை தமது முதலாவது தேர்தல் பிரசார நடவடி க்கைகளை ஆரம்பி த்தனர். 

  இந்நிலையில் அவர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தேர்தல் பிரசா ரங்களில் ஈடுபட்டதாகவும் அதில் சந்தேகம் கொண்ட பொலிஸார், தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டார்களா என்ற கோண த்தில் அவர்களை அங்கிருந்து அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொ ண்டு விட்டு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். 

  இதேவேளை, அவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசார நடவடி க்கையில் ஈடுபட்டால் தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வரதராஜப்பெருமாள் உட்பட 6 பேரிடம் பொலிஸார் விசாரணை Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top