Breaking News

கூட்டமைப்பு ஹாபிஸ் நசீர் அஹமட்டை முதலமைச்சராக நியமிக்கவில்லை- துரைராஜசிங்கம்

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட்டை பதவிக்கு நியமித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். 

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்ச ராக சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமை யிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியே ஹாபிஸ் நசீர் அஹமட்டை கிழ க்கு மாகாண முதலமைச்சராக கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 

 மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சி யில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொ ண்டு உரையாற்றும் போதே கிழக்கு மகாண சபையின் முதலமைச்சர் பத வியை தமிழர் ஒருவர் ஏன் பெற்றுக்கொள்ள முடியதா நிலை ஏற்பட்டது என்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி துரைராஜசிங்கம் விவரித்துள்ளார். 

மேலும் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் உலக நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களைப் போன்று தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஆட்சி உரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் நாட்டின் அர சியலமைப்புச் சட்டம் புதிதாக எழுதப்பட்டு சமஷ்டி என்கின்ற கூட்டாட்சி ஏற்ப டுத்துவதற்காக தொடர்ச்சியான செயற்பாடுகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

எல்லா நாடுகளிலும் அந்த நாட்டின் சுதந்தித்திற்கு முன்பு இல்லாதவாறு சுத ந்திரமடைந்த பின்பு சொந்த நாட்டிலே சுயமரியாதையுடனும் கௌரவத்து டனும் வாழக்கூடிய நிலை ஏற்பட்டது. ஆனால் எமது நாடு 1948ல் சுதந்திர மடைந்ததைத் தெடர்ந்து ஒவ்வொரு சட்டங்களாக வந்து தமிழருடை கழு த்தை நெரித்து தமிழர்களுடைய வாழ்வை மூச்சுச் தினர வைத்ததாகத் தெரி வித்துள்ளார்.