இவ் வருடத்திலாவது தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்! (காணொளி)

இந் நிகழ்வில் கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாண வர்களைக் கௌரவித்து பதக்கங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன்,குணசீலன், சர்வேஸ்வரன் உட்பட மாகண சபை உறுப்பி னர்கள் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எனப் பலரும் கல ந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வ ரன் வடமாகாணசபையின் 5 வருடங்கள் நிறைவடையும் நிலையில் கடந்த வருடங்களில் தாமதப்படுத்தப்பட்ட விடயங்களை இவ்வாண்டிலாவது நடை முறைப்படுத்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.