Breaking News

பருத்தித்துறையிலும் கூட்டமைப்பு ஈ.பி.டிபி உடன் இணைந்த ஆட்சி

பருத்தித்துறை நகர சபையினையும் ஈ.பி.டி.பி யின் ஆதரவுடன் கூட்டமைப்பு கைப்பற்றியது.

தவிசாளராக ஜோசப் இருதயராசா , பிரதித் தவிசாளராக மதினி நெல்சன் தேர்வாகினர். 

பருத்தித்துறை நகர சபை தேர்தலில் த.தே.மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்த நிலையில் முன்னணியை ஆட்சியமைக்கவிடாது சமூகவிரோத கட்சியான ஈ.பி.டி.பியுடன் கூட்டுச்சேர்ந்துள்ளது த.தே.கூட்டமைப்பு.

இருப்பினும் எதிர்த்தரப்பான த.தே.மக்கள் முன்னணியுடன் 8 உறுப்பினர்கள் எதிர்த்தரப்பில் சபையில் இருப்பதால் சபையை நடாத்துவதில் தொடர்ந்தும் இழுபறிநிலையே உருவாகியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியத்தை பிரேரித்தனர். அதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாய கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஜோசப் இருதயராஜாவுக்கு வாக்களித்தனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆறு உறுப்பினர்களும் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியத்திற்கு வாக்களித்தனர். கேடய சின்னத்திலும் , உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வென்ற உறுப்பினர்கள் தலா ஒருவரும் நடு நிலமை வகித்தனர். 

அதனை அடுத்து 7 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜோசப் இருதயராஜா தவிசாளாரக தெரிவானர். அதனை தொடர்ந்து உப தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மதினி நெல்சனை பிரேரித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுப்பிரமணியம் கோகுலகுமாரை பிரேரித்தனர். அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது மதினி நெல்சன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவுடனும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவுடனும் உப தவிசாளராக தெரிவானார்.