Breaking News

அரச குழுவுடன் ஜெனிவா சென்ற சரவணபவன் எம்பி!

ஜெனீவாவில் மனித உரிமைகள் அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்க நாடாளுமன்றங்களின் ஒன்றிய மாநாட்டில் கரு ஜெயசூர்யா தலைமையிலான சிறிலங்கா குழுவில் ஈ.சரவணபவன் சத்தமின்றி கலந்து கொண்ட செய்தி தற்போது அதில் கலந்துகொண்ட உறுப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

தனது ஜெனீவா பயணத்தை முடிமறைத்த சரவணபவன் தனது தொகுதியின் சபையில் ஆட்சியமைப்பதற்கு  ஈ.பி.டி.பியின் உதவியை பெற்றுக்கொண்ட சம்பவமும் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

ஈ.பி.டி.பி மற்றும் சிங்களக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு ஆகியவற்றின் ஆதரவுடன் வலி.மேற்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

25 உறுப்பினர்களைக் கொண்ட வலி.மேற்கு பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒன்பது உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஆறு உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி சார்பில் நான்கு உறுப்பினர்களும் ஐ.தே.க சார்பில் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சைக் குழு சார்பில் இரு உறுப்பினர்களும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும் தெரிவாகியிருந்தனர்.



தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான இன்றைய முதல் அமர்வில் முன்னணி தவிசாளர் வேட்பாளராக தேவராசா ரஜீவனை நிறுத்தியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடனேந்திரனை நிறுத்தியது.

இதில், ரஜீவனை ந.பொன்ராசா முன்மொழிய ப. நின்மதி வழிமொழிந்தார். நடனேந்திரனை கூட்டமைப்பைச் சேர்ந்த உமாபதி முன்மொழிய ஜெயந்தன் வழிமொழிந்தார்.

இவர்களுக்கு மேலதிகமாக சபையின் நடைமுறையை மீறி ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவர்களான சி.பாலகிருஸ்ணன் மற்றும் நடராசா ஆகியோரும் நடனேந்திரனை முன்மொழிந்து வழிமொழிந்தனர்.

பகிரங்க வாக்கெடுப்பில் முன்னணி உறுப்பினர்கள் ஆறு பேரும் ரஜீவனுக்கு வாக்களித்தனர்.

நடனேந்திரனுக்கு அவரோடு இணைந்து அக்கட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேர், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த நான்கு பேர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூவர், சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மறற்றும் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த இருவருமாக 19 பேர் வாக்களித்தனர்.