இலங்கை பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட பாக்கிஸ்தான் - ஜனாதிபதி.! - THAMILKINGDOM இலங்கை பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட பாக்கிஸ்தான் - ஜனாதிபதி.! - THAMILKINGDOM
 • Latest News

  இலங்கை பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட பாக்கிஸ்தான் - ஜனாதிபதி.!

  இலங்கையும் பாக்கிஸ்தானும் பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர் கொண் டன என பாக்கிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹ_சைன் தெரிவித்துள்ளார்.

  பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற் கொண்டுள்ள இலங்கையின் இரா ணுவத் தளபதி மகேஸ்சேனநாயக்க பாக்கிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹ_சைனை சந்தித்தவேளை தெரிவி த்துள்ளார்.


  இலங்கைக்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையில் முன்னுதாரணமான உறவுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி இலங்கையுடனான நட்புறவு குறித்து பாக்கிஸ்தான் பெருமைய டைவதாகத் தெரிவித்துள்ளார். 

  பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளிற்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்படுவதாகவும் அவர் தெரி வித்துள்ளார். 

  இலங்கை போன்று பாக்கிஸ்தானும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர் கொண்டது எனினும் தேசிய ஐக்கியம் மற்றும் எங்கள் படையினரின் துணிச் சல் காரணமாக எங்களால் அதனை வெற்றிகொள்ள முடிந்ததாக தெரிவித் துள்ள பாக்கிஸ்தான் ஜனாதிபதி இதற்காக தனது நாடு பாரிய தியாகங்களை புரிந்துள்ளது என்றாா். 

  அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவு குறிப்பாக அயல் நாடுகளுடன் சிறந்த உறவு என்பதே பாக்கிஸ்தானின் வெளிவிவகார கொள்கை என தெரிவித்துள்ள ஜனாதிபதி மம்னூன் ஹ_சைன் காஸ்மீர் விவகாரம் பிராந்தியம் எதிர் கொள்ளும் பாரிய சவாலாக காணப்படுவதாகத் தெரிவித்துள்ளாா். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கை பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட பாக்கிஸ்தான் - ஜனாதிபதி.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top