சுதந்திரக்கட்சியின் 16 பேரைக்கொண்ட மாற்று அணியினர் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ள சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மக்கள் விடுதலை முன்னணி முன் வைத்துள்ள 20 ஆவது திருத்த சட்டம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் மந்தகதியை அடைந்துள்ளமை, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு, நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
விடயங்கள் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் மாற்று அணியினர் தமது நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் தெரிவிக்கவுள்ளனர். குறிப்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் மிகவும் ஆர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
எனவே இது தொடர்பில் சுதந்திரக்கட்சியின் மாற்று அணியினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் கலந்துரையாடவுள்ளதுடன் அடுத்தகட்டத்தை நோக்கி இதனை நகர்த்த முடியுமா என்பது குறித்து ஆராயவுள்ளனர். அதுமட்டுமன்றி மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்த சட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவிருக்கிறது.
தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான சந்திப்பு தொடர்பில் சுதந்திரக்கட்சியின் மாற்று அணி முக்கியஸ்தர் டிலான் பெரேரா கேசரிக்கு குறிப்பிடுகையில், நாம் அனைத்து அரசியல் கட்சிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றோம்.
அந்த அடிப்படையில் இன்று சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சு நடத்தவிருக்கின்றோம். இதன்போது புதிய அரசியலமைப்பு விவகாரம் 13ஆவது திருத்த சட்டம் மற்றும் அரசியல் தீர்வு தேர்தல் முறை மாற்றம், என்பன தொடர்பில் எமது 16 பேரின் நிலைப்பாட்டை தெளிவாக சம்பந்தனிடம் எடுத்துரைப்போம்.
நாங்கள் 16 பேரும் தொடர்ந்து சுதந்திரக்கட்சியுடன் இணைந்துதான் செயற்படுகின்றோம் என்பதை அவருக்கு விளக்கிக்கூறுவோம். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் நாங்கள் கேட்கவேண்டிய சில கேள்விகள் இருக்கின்றன.
அதாவது தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது முக்கியமா? அல்லது ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்தி ருப்பது முக்கியமா என நாங்கள் சம்பந்தனிடம் கேள்வி எழுப்ப இருக்கின் றோம். அக்கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கின்றோம்.
ஆக்கப்பூர்வமான சந்திப்பு இடம்பெறும் என நாங்கள் நம்புகின்றோம்.