வடமராட்சியில் ஆா்ப்பாட்டத்தில் குதித்த மீனவா்களுக்கு கொலை மிரட்டல்! - THAMILKINGDOM வடமராட்சியில் ஆா்ப்பாட்டத்தில் குதித்த மீனவா்களுக்கு கொலை மிரட்டல்! - THAMILKINGDOM

 • Latest News

  வடமராட்சியில் ஆா்ப்பாட்டத்தில் குதித்த மீனவா்களுக்கு கொலை மிரட்டல்!

  வடமராட்சி கிழக்கு தாளையடி மருதங்கேணி செம்பியன்பற்று கடற்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான வாடி களை அமைத்து கடலட்டை பிடிப்பதற்கு எதிராக வடமராட்சி கிழக்கு மீனவர் கள் ஆர்ப்பாட்டமொன்றை நேற்று முன்தினம் (28-05-2018) முன்னெடுத்துள்ள னா். 

  இந்நிலையில் குறித்த போராட்ட த்தை நடத்தியவர்களில் பலருக்கு தொலை பேசி மூலமாக கொலை அச் சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. அத்துடன் வெள் ளை வானில் கடத்துவோம் நான்காம் மாடி பார்க்க ஆசையாக இருக்கின் றதா என அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக மருதங்கேணி பிதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரி வித்துள்ளனர்.

  இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த கட லட்டை வாடி தொடர்பான முடிவுகள் ஏதும் எட்டப்படாது கலந்துரையாடல் நிறைவுபெற்றது.

  எதிர்வரும் 1ம் திகதி கடற்றொழிலாழர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் கலந் துரையாடலில் முடிவுகள் கிடைக்கலாமென மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தவறினால் மாபெரும் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போமெனத் தெரி வித்துள்ளனா். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வடமராட்சியில் ஆா்ப்பாட்டத்தில் குதித்த மீனவா்களுக்கு கொலை மிரட்டல்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top