118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவிப்பு.! - THAMILKINGDOM 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவிப்பு.! - THAMILKINGDOM
 • Latest News

  118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவிப்பு.!

  பேர்பெட்சுவல் நிறுவனத்திடமிருந்து 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதை உறுதிசெய்யும் ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளன என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர முன் வைத்து குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய தயார் என ஜனாதிபதி யின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

  தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற் றச்சாட்டுகள் உண்மையென  தனது அலுவலகத்தின் மூலம் விசாரணை நடத்தப்படுமென தெரிவித்துள்ளார். 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றனர் என தயாசிறிஜய சேகர குற்றச்சாட்டுகளை முன்வைத் துள்ளதை பத்திரிகைகள் மூலம் அறி ந்துகொண்டேன் எனத் தெரிவித் துள்ளார்.


  நான் தயாசிறியிடம் இது குறித்து கேட்டேன் அவர் 118 பேர் குறித்த விபரங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளது என குறிப்பிட்டார் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆராய்ந்த பின்னர் ஊடகங்களிற்கு உண்மையை தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று பொலிஸார் இது குறித்து அர்ஜூன் அலோசியசிடம் புதிய வாக்கு மூலத்தை பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவிப்பு.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top