Breaking News

கோத்தா இல்லை ; வேட்பாளராக தினேஷ் தெரிவு.!

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக் கட்சியின் பங்காளிகளான இடதுசாரிகள் தினேஷ் குண வர்தன தெரிவாகியுள்ளாா். 

கூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட் பாளராக முன்னாள் பாதுகாப்பு செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டால் தீர்க்கமான முடி வினை எடுக்க நேரிடலாம். 

2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்துவதற்கு இடசாரி கட்சி என்ற வகையில் ஏற் றுக்கொள்ளப்போவதில்லை. 

கடந்த வாரம் நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் கள் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறு இரு க்க ஊடகங்களில் செய்திகள் பரவியுள்ளன. 

எனினும் இவ்விடயம் குறித்து கூட்டு எதிரணியிலுள்ள கட்சிகளுக்குள் முர ணான கருத்துக்கள் தென்படுவதாக இடதுசாரி கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இவ் விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கலந்தா லோசிக்கவுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளாா்.