மத்திய அரசுடனான இணக்கத்திற்கான அரசியலில் சம்பந்தன் நகா்வதாக.!
அனைவரையும் ஒன்றிணையும் படியான அதிகாரமானது கூடுதலாக ஜன நாயகப் போராளிகள் கட்சிக்கே உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து பய ணிக்க வேண்டிய விடயத்தில் நாமும் உறுதியாக உள்ளோம்.
மேலும் யார் யாருடன் இணைவது, எவ்வாறு இணைவது என்பது பல் வேறு இடர்களின் மத்தியில் மக்க ளின் உண்மையான விடுதலைக்காக நிலைப்பாடுகளை முன்னெடுப்பவர் கள் யார் என்பதை மக்களே இனங் கண்டு கொள்வார்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஊடகப் பேச்சாளர் ப.கோணேஸ் தெரிவித்துள்ளாா்.
மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் கட்சியின் மட்டக் களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் மற்றும் மட்டக்களப்பு பொறுப்பாளர் நா.தீபன் ஆகியோரும் கலந்துள்ளனா்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலரைப் பிடிக்கவில்லை என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியில் செல்ல வேண்டிய தில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே இருக்க வேண்டும்.
எனவே எமது மக்கள் எந்தத் தேர்தலாக இருந்தாலும் மிகவும் நிதானமாக, விழிப்பாக இருக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே இவ் விடயத்தில் ஜன நாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கின்ற அதே நேரம் மக்களும் தெளிவாகச் செயற்பட வேண்டும்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சி சார் பாகவும் வேட்பாளர்களைத் தெரிவு செய்துள்ளோம்.
தமிழ் மக்கள் இந்த மண் ணில் அச்சமின்றி எங்களை நாங்களே ஆளுகின்ற ஆட்சி அதிகாரத்தைக் கோருகின்ற ஒரு இனம். கடந்த காலத்தில் எமது தலைவர் இருமுனைகளில் எமது போராட்ட நகர்வுகளை நடாத்தியுள்ளாா்.
ஆயுதவடிவத்திலான போராட்டம் மற்றும் அரசியல் வடிவத்திலான போராட் டம். எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிறகு அரசியல் வடிவப் போராட்டம் தற்போதும் நடந்துகொண்டே இருக்கின்றது.
அதில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புடன் இணைந்து நாங்கள் எமது நகர்வுகளை நகா்த்துகின் றோம்.
எல்லா நதிகளும் கடலை நோக்கியே பயணிப்பது போல எமது அனைத்து முன் னெடுப்புகளும் எமது மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளோடு ஒன் றித்தே இருக்கின்றது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சியை வரவேற்கின்றோம்.
ஆனால் அனைவரையும் ஒன்றுபடுத்துகின்ற, அனைவரையும் ஒன்றிணையச் சொல்லுகின்ற அந்த அதிகாரமானது கூடுதலாக ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கே இருக்கின்றது.
அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய விடயத்தில் நாங்களும் உறுதியாக இருக்கின்ற அதே நேரம் யார் யாருடன் இணைவது, எவ்வாறு இணைவது என்கின்ற பல்வேறு இடர்கள் இருக்கின்றன.
போராளிகள் பல்வேறு தரப்புகளாக உள்ளனர் என்கின்ற குறைபாடு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
எமது கட்சி யாருக்கும் விரோதமானது அல்ல. கடந்த போராட்ட காலத்தில் பல போராட்டக் குழுக்கள் உருவாகின. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்டது மக்களுக்குச் சேவை செய்யக் கூடிய, மக்களின் நலனோடு பயணிக்கக் கூடிய ஒரே ஒரு அமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை மக்களே தெரிவு செய்தார்கள்.
அதே போன்று போராளிகள் மத்தியில் எத்தனை தரப்புகள் இருந்தாலும் மக்களுக்காக, மக்களின் உண்மையான விடுதலைக்காக நிலைப்பாடுகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்களே இனங்கண்டு கொள்வார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் பிரபாகரன் கொள்கையில் இருந்து விலகாமல் பயணிக்கின்றது என்கின்ற ஒரு கருத்து இருந்தது.
இதனூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தற்போது தமிழ் மக்களின் நிரந்தர அடிப்படை அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசுடன் ஒரு இணக்கப்பாடான அரசியல் முறையொன்றைக் கையாளு கின்றார்.
அந்த முறைமையை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனெனில் கடந்த காலங்களில் நாங்கள் பயங்ரவாதிகளாகப் பார்க்கப்பட்டு அரசாங்கங்கள் சில தீர்வுகளை முன்வைக்கின்ற போது அதற்கு தடையாக இருந்தவர்கள் என் கின்ற கருத்து காணப்பட்டுள்ளது.
எனவே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் நிரந்தர அடிப்படை அபிலாசையான தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய அரசியற் தீர்வினை நோக்கித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பயணிக்கு மாக இருந்தால் அதனோடு நாங்களும் தொடர்ந்தும் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.
ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எமக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. எனவே எமது கட்சியுடன் இணைந்து பயணிக்க விரும்பும் அனைத்து முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் இணைய முடியும்.
எமது கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமைலமைச் செயலகம் வெல்லாவெளி கமநல திணைக்களத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படுகின்றன. இதனுடாக அங்கத்து வத்தைப் பெற முடியுமெனத் தெரிவித்துள்ளாா்.