"கட்டுநாயக்க விமான நிலையத்தை தனியார் மயமாக்க திட்டம்" - THAMILKINGDOM "கட்டுநாயக்க விமான நிலையத்தை தனியார் மயமாக்க திட்டம்" - THAMILKINGDOM
 • Latest News

  "கட்டுநாயக்க விமான நிலையத்தை தனியார் மயமாக்க திட்டம்"

  நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக் காலத்திலிருந்து தேசிய சொத்துகளை விற் பனை செய்வதுடன். அதன் வரிசையில் கட்டுநாயக்க விமான நிலையத் தையும் தனியார் மயப்படுத்துவதற்கான திட்டங்களை தீட்டி வருவதாக  டி.வி.சானக தெரிவித்துள்ளார். 

  மேலும் தெரிவிக்கையில், 

  நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தேசிய சொத்துகளை விற்பனை செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றது.  அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், பாலாலி விமான நிலை யம், கட்டுநாயக்க விமான நிலையம் என சகலவிதமான தேசிய சொத்துக் களையும் விற்பனை செய்வதற்கே ஏற்பாடமைத்துள்ளது.

  கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கே இவ்வாறு தேசிய சொத்துகளை விற் பனை செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. எனினும் விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு கடன் தீர்க்கவில்லை. 

  இந்தியாவை சமாதனப்டுத்துவதற்கே மத்தள விமான நிலையத்தை இந்தியா விற்கு வழங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனவே ஒவ்வொரு நாட்டையும் சமாதானப்படுத்துவதற்கு தேசிய வளங்களை தாரை வார்ப்பதென்றால் எமது எதிர்கால சந்ததியினருக்கு எதுவுமே இல்லையெனத் தெரிவித்துள்ளாா். 


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: "கட்டுநாயக்க விமான நிலையத்தை தனியார் மயமாக்க திட்டம்" Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top