சிறையில் உடல் நலக்குறைவான திருமுருகன் காந்தியை விடுதலை செய்க.! - THAMILKINGDOM சிறையில் உடல் நலக்குறைவான திருமுருகன் காந்தியை விடுதலை செய்க.! - THAMILKINGDOM
 • Latest News

  சிறையில் உடல் நலக்குறைவான திருமுருகன் காந்தியை விடுதலை செய்க.!

  சிறையிலுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் அவரது உடல்நலனை கருத் தில் எடுத்து உடனடியாக விடுவிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா். 

  அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

  "மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி மீது, ஏராளமான வழக்குகளை ஜோடித்து வேலூர் மத் திய சிறைச்சாலையில் அடைக்கப் பட்டுள்ளார். திருமுருகன் காந்தி ஆயு தம் ஏந்தி வன்முறை செயலில் ஈடுபட்டவர் அல்ல. சட்டத்திற்கு புறம்பான முறையில் செயற்பட்டவரும் அல்ல.

  அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட் பட்டு கருத்துக்களைக் கூறி வந்தார். இயக்கங்களை நடத்தி வந்தார். திருமுருகன் காந்தி மீது பல்வேறு பிரிவுகளில் ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவுக்கு வழக்குகள் போடப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  சிறையில் உள்ள திருமுருகன் காந்தி மிகக் கடுமையான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. அவரது உடல் நலன் கருதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிறையில் உடல் நலக்குறைவான திருமுருகன் காந்தியை விடுதலை செய்க.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top