Breaking News

கொள்கையில் உறுதி! பேரவையை பலமாக்கி அடுத்த கட்டத்திற்கு நகா்வோம்.!

முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என் னால் முடிந்­த­வற்றை செய்வதாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்துள்ளாா். 

தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் மீண்டும் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளதாக தெரிவித்தவா் வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் தெரிவித்துள்ளாா்.

எதிர்­வரும் மாதம் 25ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலை யில் அடுத்­த­ கட்ட செயற்­பா­டுகள் குறித்து முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரனின் பிரத்­தி­யேக கருத்துப் பரி­மாற்­றத்தின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்துள்ளாா்.

கேள்வி – ஒக்­டோபர் 23ஆம் திகதி உங்­களின் பிறந்த தினத்­தன்று வட­மா­காண சபையின் முதலாம் அத்­தி­யாயம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன செய்யப் போகி­றீர்கள்?

பதில் - 24ஆம் திகதி பௌர்­ணமி தின­மா­கை­யாலும் 25ஆம்; திக­தியே கடைசித் தின­மாகக் கூறப்­பட்­டுள்­ள­தாலும் வட மாகா­ண­சபை ஒக்­டோபர் 23ஆம் திகதி கூட இருக்­கின்­றது.

அன்­றைய தினம் பிறந்த தின­மாக அமைந்­தது எதேச்­சை­யாக ஏற்­பட்ட ஓர் ஒற்­றுமை.நான் முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனஞ் செலுத்த உள்ளேன்.

கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து, எமது மக்­களின் தேவை­களை, அபி­லா­ஷை­களை, விருப்பு வெறுப்­புக்­களை, கரி­ச­னை­களைத் தெரிந்து வைத்து உல­கிற்கு எடுத்துக் கூறவும் அர­சாங்­கத்­திற்கு எடுத்துக் கூறவும் வேண்­டி­யுள்­ளது. என்னால் முடிந்­ததை இது சம்­பந்­த­மாகச் செய்ய முன்­வ­ருவேன்.

கேள்வி – அடுத்த கட்டம் தொடர்பில் 4 தெரி­வு­களைக் கொண்­டி­ருக்கும் நீங்கள் இறுதி முடிவை எப்­போது எடுக்­க­வுள்­ளீர்கள்? 

பதில் - வட­மா­கா­ண­சபைத் தேர்­தல்கள் உடனே நடை­பெ­றக்­கூ­டிய சாத்­தியக் கூறுகள் மிகவும் குறைவு. முதலில் நான்­கா­வது தெரிவில் ஈடு­பட்டுக் கொண்டு மேற்­கொண்டு நடக்க வேண்­டி­யவை பற்றி பின்னர் ஆராய்வோம்.

கேள்வி – உங்­களை முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்ய வேண்டும் என்­பதில் ஆரம்பம் முதல் இறு­தி­வரை இறுக்­க­மாக இருந்த கூட்­ட­மைப்பின் தலை வர் சம்­பந்­தனை சந்­திப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உண்டா? 

பதில் - நான் எப்­பொ­ழுதும் ஆயத்தம். அவ­ருடன் எனக்­கென்ன பிணக்கு? அவ ரின் வலது கரம் இட­ம­ளித்தால் அவரும் என்னைச் சந்­திப்­பதில் அவ­ருக்கு எந் தத் தடங்­கலும் இருக்­காது என்று நம்­பு­கின்றேன்;.

கேள்வி – உங்­க­ளி­டத்தில் காணப்­படும் 4 தெரி­வு­களில் நான்­கா­வது தெரிவை மேற்­கொள்ளும் பட்­சத்தில் கூட்­ட­மைப்பு வர­வேற்­புடன் ஆத­ரவை நல்கும் என அதன் பேச்­சாளர் தெரி­வித்­தி­ருக்­கின்­றதைக் கருத்தில் எடுப்­பீர்­களா? 

பதில் - கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே ஆத­ரவு நல்­கியே வரு­கின்­றது. பேச்­சா­ள­ருக்கு இது தெரி­யாது போலும்!

கேள்வி – கொள்கை ரீதி­யாக புதிய கூட்­ட­ணியை உரு­வாக்கி அடுத்த தேர்­தலில் கள­மி­றங்­கு­வீர்­களா? 

பதில் - இன்­னமும் முடி­வெ­டுக்­க­வில்லை. ஆனால் கொள்கை ரீதி­யா­கவே எனது நிலை இருக்கும் என்­பதில் சந்­தேகம் இருக்கத் தேவை­யில்லை.

கேள்வி – எதிர்­கா­லத்தில் கூட்­ட­மைப்­புடன் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று அதன் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தி­யப்­பாடு உள்­ளதா? 

பதில் - தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் சாத்­தி­யப்­பாடு உண்டு.

கேள்வி – வட­மா­காண சபையின் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டில் பின்­ன­டை­வுகள் உள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா? 

பதில் - இன்­றைய மத்­திய அர­சாங்கம் பற்­றியும் அவர்­களின் வினைத்­திறன் சம்­பந்­த­மா­கவும் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. ஆகவே யாரும் இவ்­வா­றான கேள்­வி­களை யாரைப்­ பற்­றியும் அடுக்­கலாம். எம்மைப் பொறுத்த வரையில் பின்­ன­டை­வு­க­ளுக்குக் காரணம் நாமல்ல.

எம்முள் இருந்து கொண்டே எமக்குக் குழி­ப­றித்துக் கொண்­டி­ருப்­போரே அதற் குப் பதில் கூற வேண்டும். அர­சியல் ரொட்டித் துண்­டு­களைக் காட்டி அற நிலை மறந்த அவை­யினர் சிலரை வைத்து அரங்­கேற்­றிய நாட­கங்கள் பின்­ன­டை வைத் தராமல் எதனைத் தரு­வன?

அப்­படி இருந்தும் எமது செயற்­பா­டுகள் பற்றி நல்­லதே கூறப்­பட்­டுள்­ளன. நாடு பூரா­கவும் உள்ள 800க்கும் அதி­க­மான அரச அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் போன்­ற­வற்றுள் 2015ஆம் ஆண்டில் எமது மாகாண முத­ல­மைச்சர் அமைச்சே சில விட­யங்கள் சம்­பந்­த­மாக முத­லிடம் பெற்­றது.

2016இலும் நாம் முதன்மை நிலை­யில் தான் அடை­யாளம் காட்­டப்­பட்­டுள் ளோம். சதிகள் பல நடந்­தாலும் எமது செயற்­பா­டுகள் வினைத்­தி­ற­னு­டன் தான் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன.

முட்­டை­களை இட்­டு­விட்டு கொக்­க­ரித்து எமது வினைத்­திறன் பற்றி பறை­சாற்ற வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை.

கேள்வி – இது­வரை காலத்தில் வட மாகாண சபை சாதித்­தது என்ன? 

பதில் - எமது சாத­னைகள் பற்­றிய கைநூல் விரைவில் வெளி­வரும். அதை வாசித்துத் தெரிந்து கொள்­ளலாம்.

கேள்வி – கஜேந்­தி­ர­குமார் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் இரு துரு­வ­மா­கி­யுள்ள நிலையில் புதிய கூட்­டணி ஒன்று அமை­வ­திலும் சிக்­கல்கள் இருப்­பது போல் உள்­ளதே? 

பதில் - கொள்­கைகள் ஒன்றாக இருந்தால், மக்களின் நலனே முக்கியமென்ற எண்ணம் வேரூன்றி விட்டால் துருவங்கள் கூட இணையலாம்.

கேள்வி – மஹிந்த ராஜபக்ஷ உட்பட இலங்கையின் அரசியல் தலை மைகள் இந்தியாவின் கரிசனையை கவனத்தில் கொண்டு செயற்படு கின்ற சூழல் காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்தும் அரசியல் களத்தில் பயணிப்பதை உறுதிசெய்துள்ள நீங்கள் இந்தியாவுடன் உறவுகளை கட்டி யெழுப்புவது தொட ர்பில் கவனம் செலுத்துவீர்களா? 

பதில் - இந்தியாவுடனான எனது உறவுகள் என்றுமே நன்றாகவே இருந்து வரு கிறது அதில் கட்டி எழுப்ப எதுவும் இல்லை.