Breaking News

தமிழீழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழர் கட்சி தீர்மானம்.!

தமிழீழ போராட்டத்தில் பங்குபற்றி தாயக விடிவுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளின் தியாகத்தினை நினைவு கூறும் மாவீரர் நாள் ஆண்டுதோறும் நவம்பர் 27 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டவாறு காணப்படுகின் றது.

அந்த வகையில் உலகம் முழுவதும் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் மாவீரர் தினம் நேற்றைய தினம் பல் வேறு அமைப்புகளால் ஒருங்கிணைக் கப்பட்டு அனுசரிக்கப்பட்டுள்ளது. தமி ழகத்தை பொறுத்தமட்டில் நாம் தமி ழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை தஞ் சையில் நடத்தப்பட்டது. நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளாா்.

பெரும்பாலான பொதுமக்களும், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினரும் ஈகைச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், தமிழீழத் திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தில் தெரிவித்துள்ளதாவது, "தமிழர்களின் தாய் நிலமான ஈழத்தில் போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையி லும், இன்னமும் ஈழத் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள துயர நிலையையும்,

போரின் போதும் போருக்குப் பிந்திய கால கட்டத்திலும் காணாமல் போனவர் கள் பற்றிய தகவல்கள் அளிக்காத சிங்களப் பேரினவாத அரசின் அராஜக போக்கினையும், உலக சமூகத்திற்கு இச்சமயத்தில் நாம் தமிழர் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.

 இனப்படுகொலைக்கான நீதி இதுவரை தமிழர்களுக்கு கிடைக்காத நிலையில் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தனித் தமிழிழ சோசலிச குடியரசு நாட்டினை உருவாக்க உலகச் சமூகம் முன்வரவேண்டும் என இப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கஜா புயல் பாதிப்புகள், 7 தமிழர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளது.