முக்கிய புள்ளியில் அதிரடி மாற்றம் தடுமாறும் மைத்திரி-மஹிந்த! - THAMILKINGDOM முக்கிய புள்ளியில் அதிரடி மாற்றம் தடுமாறும் மைத்திரி-மஹிந்த! - THAMILKINGDOM
 • Latest News

  முக்கிய புள்ளியில் அதிரடி மாற்றம் தடுமாறும் மைத்திரி-மஹிந்த!

  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடியான அரசியல் நட வடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

  கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி சிறில  ங்கா அதிபர் நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அவருக்கு மிக வும் நெருக்கமாக இருந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸா நாயக்க கடும் வெறுப்படைந்துள்ளார்.

  அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவப் போவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது. எனினும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச நேரடியாக துமிந்த திஸாநாயக்கவின் வீட்டுக்குச் சென்று அவருடன் பேச்சுக்களை நடத்தியதைத் தொடர்ந்து அவர் மைத்திரி மஹிந்தவின் புதிய அரசாங்கத்தில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

   எனினும் துமிந்த திஸாநாயக்க இன்னமும் அவரது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்காத நிலையில், கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர் கூடிய நாடா ளுமன்றின் எந்த அமர்வுகளிலும் அவர் பங்கேற்கவுமில்லை.

  இவ்வாறு அரசியல் மாற்றம் தொடர்பில் அமைதிகாத்து வந்த துமிந்த திஸா நாயக்க நேற்று தனது மௌனத்தை உடைத்துள்ளார். “தற்போதைய அரசியல் முறையை நான் விரும்பவில்லை.

  நாட்டின் அபிவிருத்திக்காக எந்தவொரு கட்சி எல்லைகளுக்குப் அப்பாற்பட்ட புதியதொரு சக்தியை கட்டியெழுப்ப நான் பணியாற்றுகிறேன்.” என அவர் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள் ளார்.

  தமது அடுத்த நகர்வு எந்தவொரு கட்சி எல்லைகளையும் அடிப்படையாக கொண்டதாக இருக்காது என்றும், 2015 ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட் பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது போன்ற தேசிய நலன்களை மனதில் வைத்துப் பணியாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளாா்.

  “ஒரு நாடு முன்னோக்கிச் செல்வதற்கும், பொருளாதாரத்துக்கு உதவுவதற்கு மான ஒரு புதிய அமைப்பு முறையை உருவாக்க எதிர்பார்க்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முக்கிய புள்ளியில் அதிரடி மாற்றம் தடுமாறும் மைத்திரி-மஹிந்த! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top