Breaking News

காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளை கண்டுபிடிப்பதில் முயற்சி தொடரும் - சாலிய பீரிஸ்

காணாமல்போனவர்கள் குறித்த உண்மைகளை கண்டுபிடிப்பதில் உறுதி யாக இருப்பதாக காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல்போதல் எவ்வாறான நிலையில் நடைபெற்றது அவ்வாறு காணாமல் போனவர்களிற்கு என்ன இடம்பெற்றது என்ற உண்மைகளை வெளிக் கொணர்வது குறித்து உறுதி யாகவுள்ளோம் எனத் தெரிவித்துள் ளார்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்த விசாரணைகளிற்கு காணாமல் போன வர்கள் குறித்த அலுவலகம் உதவுவது அவசியமெனத் தெரிவித்துள்ளார்.

விசாரணை நடவடிக்கைகளின் உயர்தராதரத்தை பேணுவதுடன் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டியதன் அவசியம் குறித்து உயர் அதிகாரிக ளிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார் இதே வேளை மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களில் சில வற்றை கார்பன் டேட்டிங் எனப்படும் பரிசோதனைகளிற்கு உட்படுத்துவ தற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் முன்வந்துள்ளது.

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. மன் னார் மனித புதைகுழியிலிருந்து கார்பன் டேட்டிங் பரிசோதனைகளிற்காக ஆறு எலும்பு மாதிரிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை பார்வை யிட்டு வந்துள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகம் தெரிவித்துள் ளது.

மன்னார் நீதவான் ரீ சரவணராஜாவின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவ டிக்கைகள் இடம்பெற்றுள்ளன. காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத் தின் ஆணையாளர்கள் மிராக் ரஹீம், வேந்தன் ஆகியோர் இந்த நட வடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.மேலும் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் சட்டத்தரணிகளும் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்க ளும் பார்வையிட்டுள்ளனர்