வடக்கில் மக்களின் காணிகள் விடுவிப்பு இராணுவம் தெரிவிப்பு. ! - THAMILKINGDOM வடக்கில் மக்களின் காணிகள் விடுவிப்பு இராணுவம் தெரிவிப்பு. ! - THAMILKINGDOM
 • Latest News

  வடக்கில் மக்களின் காணிகள் விடுவிப்பு இராணுவம் தெரிவிப்பு. !

  ஸ்ரீலங்காவின் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக் கும் இடையில் நிலவிய யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் நிலை கொண்டுள் ளது.


  பொது மக்களின் காணிகள் படையின ரால் அபகரிக்கப்பட்டு முகாம்கள் அமை க்கப்பட்டுள்ளதாகவும் இதனால் படை யி னர் வடக்கில் இருந்து வெளியேறுவது டன், தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சி யான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வந்தன.

  இந்த நிலையில், இந்த வருட இறுதிக்குள் படையினர் வசமிருக்கும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமென ஐனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்திருந்தார். அத்துடன், ஐனாதிபதியின் வடக்கு, கிழக்கு செயல ணிக் கூட்டத்தின் போதும் காணி விடுவிப்பு தொடர்பில் ஆராயப்பட்டு முடி வுகளும் எடுக்கப்பட்டிருந்தன.

  பகுதி பகுதியாக காணிகள் விடுவிக்கப்படும் நடவடிக்கை கள் முன்னெடுக் கப்பட்டு வரும் நிலையில், 1099 ஏக்கர் காணியை புது வருடத்தின் ஆரம்பத் தில் விடுவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா ராணுவம் தெரிவித்துள்ளது.

  அதன்படி கிளிநொச்சி, பூநகரி பிரசேத செயலளார் பிரிவுக்கு உட்பட்ட ஜய புரம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் 285 மற்றும் 194 ஏக்கர் நிலம் விடுவிக்கப் படவுள்ளது.

  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டுக்குளம் கிராம சேவகர் பிரி வில் 120 ஏக்கர் காணியும், மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரி வில் வெள்ளாங்குளம் கிராம சேவகர் பிரிவில் 500 ஏக்கர் காணியும்  விடுவிக் கப்படவுள்ளன.

  இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள காணிகளுக்கான ஆவணங்கள், முல்லைத் தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர்களிடம் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவால் ஜனவரி மாதம் 2 ஆம் வாரத்தில் கையளிக் கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வடக்கில் மக்களின் காணிகள் விடுவிப்பு இராணுவம் தெரிவிப்பு. ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top