Breaking News

புதிய அரசியல் அமைப்பு ரீதியாக பொய்யான பிரச்சாரங்கள் - சிவசக்தி ஆனந்தன்!

புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்டி உள்ளடக்கப்பட்டதென பொய்யான பல்வேறு பிரச்சாரங்கள் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளனர் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலு வல கத்தில் வைத்து, கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் நகர சபையின் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் அர சியல் கைதிகளின் பிள்ளைகள் மற் றும், வறிய குடும்பங்களைச் சேர்ந்த வர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் நேற்றைய தினமான ஞாயிற்றுக் கிழமை (30) மாலை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

எமது கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினர்களுடன் சமகால அரசியல் நிலைமை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, எதிர்வரும் மார்ச் மாதம் இடம் பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள இச் சந்தர்ப்பத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் எதிர் வரும் சுதந்திர தினத் திற்கு முன்பாக புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவா கியுள்ளது.

எங்களைப் பொறுத்த வரையில் 2019 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கியமான தேர்தல்கள் நடைபெற இருக்கின்றது. மாகாண சபைத்தேர்தல், பாராளு மன் றத்தேர்தல் அதனை தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள இச் சந்தர்ப்பத்தில்,

கடந்த மூன்றரை வருடங்களாக புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படு கின்றது, இந்த புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்டி உள்ளடக்கப்பட்டுள் ளது போன்ற இந்த பொய்யான பல்வேறு பிரச்சாரங்கள் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பி னர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளனர்.

உண்மையிலேயே புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஜனாதிபதியும், பிர தமரும் திரும்பத்திரும்ப ஒரு செய்தியை சொல்லுகின்றார்கள். இது ஒரு ஒற் றையாட்சியை உள்ளடக்கியதாக புதிய அரசியல் யாப்பு இருக்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கூட (28) மகாநாயக்க தேரர்களைக்கூட பிரதம மந் திரி அவர்கள் சந்தித்த போது புதிய அரசியல் அமைப்பிற்கூடாக பௌத்த மதத்திற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

அதேபோல் ஒற்றையாட்சியையே இந்த நாடு கொண்டிருக்கின்றது என்ற செய்தியை கூறுகின்றதன் பிற்பாடு, இந்த புதிய அரசியல் அமைப்பு எதிர் வருகின்ற சுதந்திர தினத்திற்கு முன்பாக கொண்டு வரப்படுகின்றது என் கின்ற செய்தியானது.

மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினை மீண்டும் இவர்களும், தற்போதைய அரசும் சேர்ந்து ஏமாற்றி தமிழ் மக்க ளுக்கு கிடைக்க வேண்டிய எந்த விதமான உரிமைகளையும் பெற்றக் கொள்ள முடியாது என்கின்ற நிலைக்கே இவர்கள் இட்டுச் செல்கின்றார்கள் என்கின்ற நிலையையே நான் கூற விரும்புவதாகத் தெரிவித்துள்ளாா்.