ஜனாதிபதியின் பேராசையே மஹிந்தவின் பிரதமா் பதவி்க்கு அத்திவாராம் - ஹிருனிகா - THAMILKINGDOM ஜனாதிபதியின் பேராசையே மஹிந்தவின் பிரதமா் பதவி்க்கு அத்திவாராம் - ஹிருனிகா - THAMILKINGDOM
 • Latest News

  ஜனாதிபதியின் பேராசையே மஹிந்தவின் பிரதமா் பதவி்க்கு அத்திவாராம் - ஹிருனிகா

  துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஜனாதிபதியின் அனு மதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்படுகின்றது. ஜனாதி பதியின் இந் நடவடிக்கை போதையை ஒழிக்கும் அவரது கொள்கைக்கு முர ணானதென ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளாா். 

  பாராளுமன்றத்தில் நேற்று செவ்வா ய்க்கிழமை நடைபெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

  கொலைக் குற்றத்துக்காக மரண தண் டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு எதிர்வரும் சுதந்திர தினத்தில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

  அதற்காக ஜனாதிபதியின் அறிவுறுத்தலுடன் கொலண்ணாவை உட்பட கொழு ம்பு மாவட்டத்தின் மக்களிடம் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருவதாக சமூக வலைத்தலங்களில் பிரசுரமாகி இருக்கின்றது.

  இது தொடர்பான சாட்சிகளும் என்னிடம் இருக்கின்றன. அத்துடன் துமிந்த சில் வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை.

  அவர் எனது தந்தையை கொலை செய்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவ ருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. எனது போராட் டமும் அதுவாகவே இருந்து. அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  அதன் பின்னர் எனது கடமை முடிந்தது. ஆனால் நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் பிரதானமாக இருக்கும் துமிந்த சில்வா போன்றவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறைச்சாலை களில் இருக்கும் ஏனைய கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படும்.

  இது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். ஜனாதிபதி தனக் கிருக்கும் அதிகாரத்தை தனது சுயநலனுக்காக பயன்படுத்தக்கூடாது. மேலும் ஜனாதிபதி மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தமையாலே அவரை ஜனா திபதியாக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம்.

  ஆனால் அவர் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மேற்கொண்ட அரசியல் சூழ்ச் சிக்கு பின்னர் அவர் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஜனாதிபதி, துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பளிக்க நட வடிக்கை எடுக்கமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

  நாட்டில் போதைகொருளை ஒழிக்க எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ள பின்வாங்கப்போவதில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதி தற்போது அவரது கொகைக்கு முரணாக செயற்படுகின்றாா்.

  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாக வேண் டும் என்ற பேராசையிலே அவர் தற்போது அவரது கொள்கைக்கு முரணாக செயற்பட்டு வருவதனால்தான் தனது எதிரியாக தெரிவித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ்விற்கு பிரதமா் பதவியை வழங்கியுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா். 

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ஜனாதிபதியின் பேராசையே மஹிந்தவின் பிரதமா் பதவி்க்கு அத்திவாராம் - ஹிருனிகா Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top