யாழில் வீடுள்ளிட்டு கொள்ளை, சிறுமி மீது பாலியல் வன்கொடுமை.! - THAMILKINGDOM யாழில் வீடுள்ளிட்டு கொள்ளை, சிறுமி மீது பாலியல் வன்கொடுமை.! - THAMILKINGDOM
 • Latest News

  யாழில் வீடுள்ளிட்டு கொள்ளை, சிறுமி மீது பாலியல் வன்கொடுமை.!

  யாழ். வலி வடக்கில் வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணத்தினை கொள்ளையிட்டதுடன், வீட்டில் இருந்த பதின்ம வயது சிறுமி ஒருவரையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன் தப்பித்துள்ளனா். 

  வலி.வடக்கில் இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடை பெற்றுள்ளது. மேலும் தெரிய வருவ தாவது, வலி.வடக்கு பகுதியில் மூவர டங்கிய கொள்ளை கும்பல் ஒன்று இரு வீடுகளில் கொள்ளையடித்துள் ளனா்.

  ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெரியம்மா மற்றுமொரு உறவி னரான பெண்ணொருவர் என மூவார இருந்துள்ளனர். அந்த வீட்டினுள் கூரையை பிரித்து உட்புகுந்த மூன்று கொள்ளையர்களும் வீட்டினுள் இருந்த மூன்று பெண்களையும் கட்டி வைத்து விட்டு, சல்லடை போட்டு தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்திணை கொள்ளையடித் துள்ளனா்.

   சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து சிறுமியை மீட்ட பொலிஸார், சிறு மியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள னர். 

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: யாழில் வீடுள்ளிட்டு கொள்ளை, சிறுமி மீது பாலியல் வன்கொடுமை.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top