பஸ் - லொறி நேருக்கு நேர் மோதுண்டு - 26 பேர் பலி.! - THAMILKINGDOM பஸ் - லொறி நேருக்கு நேர் மோதுண்டு - 26 பேர் பலி.! - THAMILKINGDOM
 • Latest News

  பஸ் - லொறி நேருக்கு நேர் மோதுண்டு - 26 பேர் பலி.!

  பாகிஸ்தானின், பலூசிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதுண்டதினால் 26 பேர் உயி ரிழந்துள்ளனர்.

  நேற்று இரவு சுமார் 40 பயணிகள் மேற் படி பஸ்ஸுல் பயணித்துக் கொண்டி ருந்தபோது பலூசிஸ்தானின், ஹப் அருகே, எதிரிபொருள் ஏற்றி வந்த லொறியொன்றுடன் மோதியுள்ளது.

  இவ்வாறு மோதிய லொறியில் ஈரா னிய டீசல் இருந்ததால் விபத்தின் போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் உயிரை காப்பாற்ற பஸ்ஸை விட்டு தப்பிக்க முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.

  இவ் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் லாஸ் பேலா துணை ஆணையாளர் ஷபீர் மெங்கல் தெரிவித்துள்ளார்.

  மேலும் 16 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பஸ் - லொறி நேருக்கு நேர் மோதுண்டு - 26 பேர் பலி.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top