7கோடி இந்திய பரிசோடு உலக சாதனையை நிலைநாட்டிய தமிழன்(காணொளி) - THAMILKINGDOM 7கோடி இந்திய பரிசோடு உலக சாதனையை நிலைநாட்டிய தமிழன்(காணொளி) - THAMILKINGDOM

 • Latest News

  7கோடி இந்திய பரிசோடு உலக சாதனையை நிலைநாட்டிய தமிழன்(காணொளி)

  அமெரிக்காவின் CBS தொலைக்காட்சி நடத்திய
  தலைச்சிறந்த திறமைகளுக்கான தேடுதல் நிகழ்ச்சியான "The World's Best" நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் பட்டம் வென்று அசத்தியதுடன் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றுள்ளார்.

  பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமைகளில் தலைசிறந்ததை தேர்ந்தெடுக்கும் நோக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான The World's Best-இன் முதல் சீசனின் இறுதிப் போட்டி புதனன்று நடைபெற்றது. சீசன் 1-இல் மொத்தம் நடத்தப்பட்ட 12 எபிசோட்களையும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கினார்.  ட்ரூ பேரிமோர், ரூபால் சார்லஸ், ஃபெயித் ஹில் ஆகிய மூன்று நடுவர்களும், 'Wall of The World' எனும் 50 நடுவர்கள் குழுவும் இணைந்து உலகின் மிகச்சிறந்த திறமையை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கடந்த பிப்ரவரி முதல் ஈடுபட்டிருந்தனர்.

  பட்டம் வெல்வார் என்று பெரிதும் பேசப்பட்ட கஜகஸ்தானைச் சேர்ந்த இளம்பாடகர் Dimash Kudaibergen சிறார்களான லிடியன் நாதஸ்வரம் மற்றும் டேனிலியா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இறுதிப்போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து நடுவர்களுக்கே அதிர்ச்சி அளித்தார். நடுவர்களின் சமாதானத்தை ஏற்காமல் அவர், முதல் சீசனில் இருந்து விலகினார்.

  The World's Best பட்டத்திற்கான இறுதி சுற்றுத் தேர்வு தென்கொரியாவின் Kukkiwon எனும் தற்காப்புக்கலையை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்ற சாகச குழுவிற்கும், இசைக்கலைஞர் வர்ஷனின் மகனும், பியானோ இசைக்கலைஞருமான 13 வயது லிடியனுக்கும் இடையில் நிகழ்ந்தது.
  லிடியன் தனது அற்புதத்திறமையை வெளிக்காட்டும் வகையில் ஒரேநேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்தினார். தென்னாப்ரிக்காவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் LIRA உள்ளிட்டோர் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டினர்.

  பீத்தோவானின் புகழ்பெற்ற Fur Elise-இல் தனது மெல்லிசையைத் தொடங்கிய லிடியன், போலாந்து இசையமைப்பாளர் Chopin-இன் Etudes-ஐ மின்னல் வேகத்தில் இரண்டு பியானோக்களிலும் ஒருசேர இசைத்து மலைக்க வைத்தார்.

  இறுதிச்சுற்றில், 'Wall of The World' நடுவர் குழு அளித்த வாக்குகளின் அடிப்படையில் லிடியன் நாதஸ்வரம், The World's Best பட்டத்தை வென்றதுடன், 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றார்.

  முன்னைய சாதனையாளர் பதிவுகளுக்கு அழுத்தவும்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: 7கோடி இந்திய பரிசோடு உலக சாதனையை நிலைநாட்டிய தமிழன்(காணொளி) Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top