இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக வேண்டும் - கனே­டிய பிர­தமர் - THAMILKINGDOM இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக வேண்டும் - கனே­டிய பிர­தமர் - THAMILKINGDOM
 • Latest News

  இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக வேண்டும் - கனே­டிய பிர­தமர்

  இலங்­கையில் அர்த்­த­முள்ள வகையில் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளினால் நம்­பக்­கூ­டிய வகை ­யி­லான பொறுப்புக் கூறல் பொறி­மு­றைமை ஒன்றை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்டும் என்று கனே­டிய பிர­தமர் ஜஸ்ரின் ட்ரூடோ வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

  இலங்­கையில் யுத்தம் நிறை­வ­டை ந்து பத்து ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வ­தனை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள காணொளி ஒன்­றி­லேயே கனே­டிய பிர­தமர் ஜஸ் ரின் ட்ரூடோ இவ்­வாறு தெரிவித்துள்ளார்.

  அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 26 ஆண்­டு­க­ளாக நீடித்து வந்த யுத் தம் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. முள்­ளி­வாய்க்­காலில் இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போதும் அதற்கு முன்­னரும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன், பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் இடம்­ பெ­யர்ந்­துள்­ளார்கள். யுத்தம் நாடு முழு­வ­திலும் ஆறாத வடுக்­களை ஏற்­ப­டுத் திச் சென்­றுள்­ளது.

  கடந்த ஒரு தசாப்த கால­மாக யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் கனே­டி­யர்கள் பலரை தனிப்­பட்ட ரீதியில் சந்­தித்து, அவர்­களின் வலிகள் வேத­னை­களை கேட்­ட­றிந்­து­ள்ளேன். தமிழ்க் கனே­டி­யர்­க­ளு­டனான சந்­திப்­புக்­களின் ஊடாக இலங் ­கையில் சமா­தா­னத்­தையும், நல்­லி­ணக்­கத்­தையும் நிலை­நாட்­டு­வது மிக நீண்ட பயணம் என்­ப­தனை புரிந்து கொண்டேன்.

  பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளினால் நம்­பக்­கூ­டிய வகை­யி­லான பொறுப்புக் கூறல் பொறி­மு­றைமை ஒன்றை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கின்றேன். சர்­வ­தேச மற்றும் உள்­நாட்டு ரீதியில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வகையில் இந்த பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைமை அமைய வேண்டும்.

  யுத்தம் கார­ண­மாக சொந்­தங்­களை இழந்த, பல்­வேறு வழி­களில் இழப்­புக்­களை எதிர்­நோக்­கிய மற்றும் பாதிப்­புக்­குள்­ளான அனை­வ­ருக்கும் கனே­டிய அர­சாங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்­கல்­க­ளையும் வருத்­தத்­தையும் வெளி­யிட்டுக் கொள்­கின்றேன். அண்­மையில் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­தல்­க­ளையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

  அனைத்து மக்­களும் தங்­க­ளது நம்­பிக்­கை­களின் ஊடாக வழி­பா­டு­களில் ஈடு படக்கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும். கன­டாவின் வளர்ச்­சிக்கு தமிழ் கனே­டி­யர்கள் வழங்கி வரும் பங்­க­ளிப்­புக்­களை அனைத்து கனே­டி­யர்­களும் அங்­கீ­க­ரிக்க வேண்­டு­மென்று இச் சந்­தர்ப்­பத்தில் கோரு­வதாகத் தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக வேண்டும் - கனே­டிய பிர­தமர் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top