ஊட­கங்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் - THAMILKINGDOM ஊட­கங்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் - THAMILKINGDOM

 • Latest News

  ஊட­கங்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல்

  உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரிவுக்குழு வில் இடம்­பெறும் விட­யங்­களை அறிக்­கை­யிட ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எச்­ச­ரிக்கை விடுத்துள்ளது. 

  சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட அக்­கட்­சியின் பிரதி தலை வர் நிமல் சிறி­பால சில்வா, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த திஸா­நா­யக்க ஆகி­யோரே இவ்­வாறு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளனா்.

  இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­விக்­கையில்,

  இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் எதிர்­க்கட்சி உறுப்­பி­னர்கள் யாரும் இல்லை. அர­சாங்க தரப்­பினர் மாத்­தி­ரமே உள்­ளனர். இக் குழுவை நிய­மித்­த­மைக்­கான நோக் கம் என்­ன­வென்­பது எமக்கு தெரியும்.

  அத­னால்தான் நாம் அதில் பங்­கு­பற்­று­வதை விரும்­ப­வில்லை. அத்­தோடு புல­னாய்வு அதி­கா­ரி­க­ளையும் வர­வ­ழைத்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற விசா­ர­ணை­களை ஊட­கங்­களில் நேரடி ஒளி­ப­ரப்பு செய்­வது இது­வ­ரையில் எந்த நாடு­களிலும் இடம்­பெற்­ற­தில்லை.

  புல­னாய்வு பிரி­வினர் தெரி­விக்கும் விட­யங்­களை ஒருபோதும் வெளிப்­ப­டுத்த மாட்­டார்கள். ஆனால் எமது நாட்டில் சாதா­ரண பொதுமக்­க­ளுக்கு உள்ள அறிவு கூட அந்த மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இல்லை என்­பது கவ­லைக்­கு­ரிய விடயம்.

  எந்த நோக்­கத்­திற்­காக இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றார்கள் என்று தெரி­ய­வில்லை. ஆனால் எதிர்­கா­லங்­களில் புல­னாய்வு பிரி­வுக்கு ஏதேனும் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் அதற்­கான முழுப்பொறுப்­பையும் அர­சாங்­கமே ஏற்க வேண்டும் என் றார்.

  அவரைத் தொடர்ந்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த திஸா­நா­யக்க கருத்து தெரி­விக்­கையில்,

  மேற்­படி குழு நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு நாம் கடும் எதிர்ப்­பினை வெளி­யிடும் அதே­வேளை சபா­நா­யகர் கரு­ ஜயசூரிய இது குறித்து கவனம் செலுத்த வேண் டும் எனவும் கோரிக்கை விடுக்­கின்றோம்.

  தெரிவுக் குழு­வினால் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டுகள் தவறு என நாம் குறிப்­பி­ட­வில்லை. அதனை முன்­னெ­டுக்கும் முறை தவ­றா­னது என்­ப­தையே சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றோம்.

  எனவே விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும். அதற்­காக அவற்றை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­து­வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்­ப­தையே வலி­யு­றுத்­து­கின்றோம். நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை தெரி­வுக்­கு­ழுவில் இடம்­பெற்­ற­வற்றை அவ­தா­னிக்­கும்­போது முக்­கிய பதவி வகிப்­ப­வர்கள் அதற்கு சற்றும் பொருத்­த­மில்­லா­த­வாறு சில விட­யங்­களை முன்­வைக்­கின்­றனர்.

  தம்மை பாது­காத்துக்கொள்­வ­தற்­காக மற்­றை­யவர்­களை காட்டிக்கொடுக்கின் றதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. பாதுகாப்பு சபை என்பது மிகவும் இரகசியமானதொரு அமைப்பாகும்.

  அங்கு இடம்பெறும் விடயங்கள் மற்றும் எடுக்கப்படும் தீர்மானங்களை வெளி யில் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர். இவ்வாறு இருந்தால் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவதென்பது கடினமெனத் தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஊட­கங்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top