பிணவறையில் தந்தை மணவறையில் மகள் ; தங்கையின் திருமணத்தை நிறைவேற்றிய அண்ணன்! - THAMILKINGDOM பிணவறையில் தந்தை மணவறையில் மகள் ; தங்கையின் திருமணத்தை நிறைவேற்றிய அண்ணன்! - THAMILKINGDOM
 • Latest News

  பிணவறையில் தந்தை மணவறையில் மகள் ; தங்கையின் திருமணத்தை நிறைவேற்றிய அண்ணன்!

  தமிழ்நாட்டில், திருச்சி அருகே வைத்தியசாலையில் இறந்த தனது தந்தையின் உடலை பிரேத அறையில் வைத்துவிட்டு, தந்தை இறந்த தகவலை மறைத்து தனது தங்க‍ையை மணவறையில் ஏற்றி, அவருடைய திருமணத்தை அண் ணன் ஒருவர் நடத்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டம் லால் குடியருகே உள்ள செம்பறை கிராமத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நடராஜன் மற்றும் 51 வயதுடைய அவ ரது மனைவி வசந்தா, ஆகியோருக்கு 41 வயதில் உதயகுமார் எனும் மக னும், 31 வயதில் கனிமொழி எனும் மகளும் உள்ளனர்.

  இந் நிலையில் நன்னிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகனின் மகன் ராஜ குரு என்பவருக்கும் கனிமொழிக்கும் திருமணம் செய்த பெரியோர்கள் முடி வெடுத்திருந்தனர். அதன்படி அவர்களுக்கு மே மாதம் 17 ஆம் திகதி திருமணம் நடத்த நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.

  இதைத் தொடர்ந்து லால்குடி, வடக்கு ஐயன் வாய்க்காலுக்கருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை அவர்கள் முன்கூட்டியே பதிவு செய்தனர். பின்னர் திரு மண அழைப்பிதழ் அச்சடித்து மணமகனின் குடும்பத்தினர், உறவினர், நண் பர்களுக்கு வழங்கினர்.

  இந் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனமகளின் தந்தை நடராஜ னுக்கு திடீரென தலையில் கட்டியொன்று ஏற்பட்டது. இதனால் அவர் திருச்சி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்.

  வைத்தியசாலையில் அவருக்கு துணையாக அவரது மகன் உதயகுமார் தந்தையை பராமரித்து வந்தார். இதேநேரம் தங்கை கனிமொழியின் திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

  இந் நிலையில் கடந்த 16 ஆம் திகதி மு.ப.11.00 மணியளவில் மனமகளின் தந்தையாரான நடராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார். தந்தை இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிந்தால் மறுநாள் மணக்கோலம் காண வேண்டிய தனது தங்கையின் திருமணம் நின்றுவிடும் எனக் கருதிய அண்ணன் உதயகுமார் தந்தை இறந்த கவலையை தனக்குள் வைத்துக்கு கொண்டு, அது குறித்து எவரிடமும் கூறவில்லை.

  இது குறித்து வைத்தியர்களிடம் தெரிவித்துள்ள அண்ணனான உதயகுமார் தனது தந்தையின் உடலை பிரேரத அறையில் வைக்குமாறு தெரிவித்துள் ளார். பின்னர் அவர் தங்கையின் திருமணத்திற்கு செல்லாமல் வழக்கம்போல் வைத்தியசாலையிலேயே தந்தையை பராமரிப்பதாக இருந்துவிட்டார்.

  இந் நிலையில் கடந்த 17 ஆம் திகதி முடிவு செய்ததுபோல் தங்கை கனிமொழிக்கும் ராஜகுருவுக்கும் திருமணம் இடம்பெற்றது. வைத்திய சாலையின் பிரேரத அறையில் தந்தையின் உடல் இருப்பது தெரியாமல் திருமண மண்டப மணக்கோலத்தில் கனிமொழி அமர்ந்திருந்தார்.

  காலை 10.00 மணிக்கு அவர்களது திருமணம் நிறைவடைந்து அனைத்து சமய சம்பிரதாயங்களும் நிறைவடைந்தன. ‍அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நிறை வடைந்ததும், அண்ணான உதயகுமார் உறவினர் ஒருவரின் மூலம் திருமண மண்டபத்தில் உள்ளவர்களுக்கு மணமகளின் தந்தை நடராஜன் இறந்து விட்ட செய்தியை தெரிவித்துள்ளார்.

  இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புது மணப்பெண் அவரது தாய், உறவினர் களுடன் கதறியழுதார். மாப்பிள்ளை யின் குடும்பத்தினர், அதிர்ச்சியில் உறைந்தனர். திருமண விழாவுக்கு வந்த உறவினர், நண்பர்கள் அனை வரும் சோகத்தில் மூழ்கினர்.

  இதைத் தொடர்ந்து அனைவரும் வைத்தியசாலைக்கு சென்று நடராஜனின் உடலை ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு சென்றனர். அன்று மாலையே நடராஜனின் இறுதிச் சடங்குகளும் இடம்பெற்றதுடன், இதில் மணக்கோலத் தில் புதுமண தம்பதியினர் கலந்து கொண்டனர்.

  தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை அண்ணன் நிகழ்த்தி வைத்த சம்பவம் அக்கிராம மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிணவறையில் தந்தை மணவறையில் மகள் ; தங்கையின் திருமணத்தை நிறைவேற்றிய அண்ணன்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top