பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை புரட்டுமா இலங்கை? - THAMILKINGDOM பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை புரட்டுமா இலங்கை? - THAMILKINGDOM
 • Latest News

  பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை புரட்டுமா இலங்கை?

  ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் 11 ஆவது லீக் போட்டி சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே ஆரம்பமாக வுள்ளது. 

  இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு பிரிஸ்டலில் ஆரம்பமாக வுள்ளது. உலகக் கிண்ண வரலாற்றில் பாகிஸ்தானை வீழ்த்திடா இலங்கை அணி இன்றைய ஆட்டத்தில் வரலா ற்றை மாற்றும் நோக்குடன் களமிறங் கவுள்ளது.

  இலங்கை அணியை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரத்ன, குசல் பெரோ மற்றும் லஹிரு திரிமான்ன மாத்திரமே நம்பிக்கை துடுப்பாட்ட வீரர்களாக திகழ்கின்றனர். ஏனைய மத்திய தர வீரர்களான குசல் மெண்டீஸ், தனஞ்சய டிசில்வா, மெத்தியூஸ், திசர பெரேரா சோதப்பலான ஆட்டத்தையே இதுவர‍ை வெளிப்படுத்துகின்றனர்.

  குறிப்பாக மெத்தியூஸ் இரண்டு ஆட்டத்திலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்ததுடன், குசல் மெண்டீஸ் முதல் போட்டியில் ஒரு பந்துடனும், இரண் டாவது போட்டியில் இரண்டாவது பந்திலும் ஆட்டமிழந்து வெளியேறியிருந் தார்.

  பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் இப் போட்டியில் ஏனைய வீரர்களும் பொறுப்புணர்வை உணர்ந்து ஒருமித்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சர்ப்ராஸ் அகமட் தலைமையிலான பாகிஸ்தான் அணி, முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் படு தோல்வியடைந்திருந்தா லும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்வி களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

  உலக கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுவரை இலங்கையிடம் தோற்றதில்லை. அந்த அணிக்கு எதிரான 7 ஆட்டங்களிலும் பாகிஸ்தானே வெற்றிபெற்றுள்ளது. அந்த சிறப்பு இந்த உலக கோப்பையிலும் பாகிஸ்தா னுக்கு தொடருமா? அல்லது இலங்கை வீரர்கள் இந்த சரித்திரத்தை மாற்று வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை புரட்டுமா இலங்கை? Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top