நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி.! - THAMILKINGDOM நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி.! - THAMILKINGDOM
 • Latest News

  நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி.!

  உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்துக்கு எதிரான ​போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

  இதன்படி, உலகக்கிண்ண போட்டிக ளில் அரையிறுதிக்குத் தகுதிபெறும் எதிர்பார்ப்பை பாகிஸ்தான் தொடர்ந் தும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பேர்மிங் ஹமில் நடைபெற்ற இப் போட்டி மைதானத்தின் ஈரலிப்புத் தன்மை காரணமாக சுமார் ஒரு மணித்தியாலம் தாமதமாகவே ஆரம் பமானது.

  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுவதற்குத் தீர்மானித்தது. நியூஸிலாந்து சார்பில் கொலின் முன்ரோ மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி ஆடியுள்ளனா்.

  அணியின் ஓட்ட எண்ணிக்கை 5 ஆக காணப்பட்டபோது மார்டின் கப்டில் ஆட் டமிழந்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 83 ஆக காணப்பட்டபோது, நியூஸி லாந்தின் முதல் 5 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டிருந்தன.

  கன்னிச் சதத்தினை பூர்த்திசெய்யும் எதிர்பார்ப்புடன் இருந்த ஜெம்ஸ் நீசம் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையே பெற்றார். பந்துவீச்சில் சஹின் அப்ரிடி 28 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்களை வீழத்தினார்.

  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் 19 ஓட்டங்களில் வீழ்த் தப்பட்டது.

  10 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்த பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை குவித்தார். பாகிஸ்தான் அணி போட்டி நிறைவடைவதற்கு 5 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

  இதன்படி, பாகிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 7 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பட்டியலில் 11 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 2ஆம் இடத்திலிள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top