புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - THAMILKINGDOM புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - THAMILKINGDOM
 • Latest News

  புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

  உள்நாட்டுச் செய்திகள் 


  • ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட கொச்சிக் கடை புனித அந்தோனியார் தேவால யம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள் ளது. 


  • இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.   • அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடு தலை முன்னணியினர் கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.  • குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சீல் வைக்கப்பட்டுள்ள வெல் லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பூட்டை உடைத்து, அங்கு செப்பு திரு டிய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


  • பயணிகள் பஸ்ஸினை மது போதையில் ஓட்டிய சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 


  • நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வுக்கு எதிராக நேற்று (12ஆம் திகதி) முதல் ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. 


  • கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளு மன்ற தெரிவுக்குழுவுக்கு, M.L.A.M. ஹிஸ்புல்லாவை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

  👆 வௌிநாட்டுச் செய்திகள் 


  • கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக் கம் கண்டறியப்பட்டுள்ளது. 


  • இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய வர்களைக் கண்டறியும் வகையில், தமிழகத்தின் சில பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 


  • ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரச அலுவல கங்களை முற்றுகையிட்டுள்ளனர். 

  👆 விளையாட்டுச் செய்திகள் 


  • பிரான்ஸில் நடைபெறும் மகளீருக் கான உலகக்கிண்ண கால் பந்தாட்டத் தொடரில் அமெரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. 


  • உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எஞ்சியுள்ள நாட்களில் தரவரிசை யில் முன்னிலையில் நீடிக்கின்ற அணிகளை எதிர்த்தாடவுள்ளமையால் அதற்குத் தயாராதல் வேண்டும் என, இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top